Published:Updated:

சட்டங்களை வளைக்கும் சர்வாதிகாரியா... இரும்புக் கர நேர்மையாளரா... யார் இந்த ஜின்பிங்?

தந்தை மற்றும் சகோதரருடன் ஜின்பிங் (இடது ஓரம்) ( Photo: People's Daily )

அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்ததால், எங்கே... எப்படி காய் நகர்த்த வேண்டுமென்பது ஜின்பிங்குக்கு அத்துப்படி.

சட்டங்களை வளைக்கும் சர்வாதிகாரியா... இரும்புக் கர நேர்மையாளரா... யார் இந்த ஜின்பிங்?

அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்ததால், எங்கே... எப்படி காய் நகர்த்த வேண்டுமென்பது ஜின்பிங்குக்கு அத்துப்படி.

Published:Updated:
தந்தை மற்றும் சகோதரருடன் ஜின்பிங் (இடது ஓரம்) ( Photo: People's Daily )

பக்கத்து நாடாக இருந்தாலும் அமெரிக்க அதிபர்கள்போல, சீன அதிபர்கள் இந்தியாவில் அவ்வளவு பிரபலமாக இருக்கமாட்டார்கள். சீன அதிபர்களிலேயே, இந்தியாவில் அதிகம் அறியப்பட்டவர், தற்போதைய அதிபர் ஸீ ஜின்பிங்தான். சீனாவின் மூன்று முக்கியப் பதவிகளும் ஜின்பிங்கிடமே உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், நாட்டின் அதிபர், சீனா பீப்பீள்ஸ் ஆர்மியின் தலைவர் ஆகிய மூன்று பதவிகளில் அமர்ந்துள்ளார். சீனாவைப் பொறுத்தவரை, இவர்தான் சர்வ வல்லமை படைத்தவர். அரசியல் பின்புலம்கொண்ட குடும்பத்திலிருந்து வந்ததால், எங்கே... எப்படி காய் நகர்த்த வேண்டுமென்பது ஜின்பிங்குக்கு அத்துப்படி. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த, மாசேதுங்குவின் நண்பர் ஸீ ஸாங்க் ஷ்வான் என்பவரின் மகன்தான் ஜின்பிங். தற்போது, 66 வயதான ஜின்பிங் தன்னை 'மக்கள் தலைவர்' என்று அழைத்துக்கொள்வார். உள்ளுக்குள் சாகும்வரை, சீன அதிபராக இருக்க வேண்டுமென்ற ஆசையும் அவருக்கிருப்பதாகத் தெரிகிறது.

இளைஞராக ஜின்பிங்
இளைஞராக ஜின்பிங்

சுமார், 40 ஆண்டுகளுக்கு முன் 88 சதவிகித சீனர்கள் நாளொன்றுக்கு 2.7 அமெரிக்க டாலர்களில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர். 1995-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டுவரை சீனாவில் 6 கோடி பேர் வேலை இழந்தனர். இப்போது, சீனாவில் 6 சதவிகித மக்கள்தான் வறுமைக்கோட்டுக்குள் இருக்கின்றனர். ஜின்பிங்கின் ஆட்சிக்காலத்தில் சீனப் பொருளாதாரம் செழிப்படைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அலிபாபா உலகின் முன்னணி ரீடெய்ல் நிறுவனம். சீனாவின் தொழில்கள் மற்றும் வணிக வங்கி ஐ.சி.பி.சி உலகிலேயே மிகப் பெரிய வங்கிகளில் ஒன்று. டென்ஸன்ட் நிறுவனம், கணினி விளையாட்டு மென்பொருள்களைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. சைனா சதர்ன் உலகின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனம். உலகிலேயே சாம்சங் நிறுவனத்துக்குப் பிறகு, அதிக செல்போன்களை விற்கும் வாவே, உபெரின் போட்டி நிறுவனமான டிடி போன்ற நிறுவனங்கள் அசுர வளர்ச்சி கண்டது ஜின்பிங்கின் ஆட்சிக்காலத்திலேயே!

ஜின்பிங்
ஜின்பிங்

பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அதிபர் பதவியில் அமர்ந்ததும் ஊழலை ஒழிக்க ஜின்பிங், கடும் நடவடிக்கை எடுத்தார். லஞ்ச ஊழலில் திளைத்த 15 லட்சம் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர். விளைவாக, அரசு நிர்வாகம் சீரடைந்தது. இதுபோன்ற உறுதியான நடவடிக்கைகளால் சீன மக்களின் மனதில் ஜின்பிங் விரைவிலேயே இடம்பிடித்துவிட்டார். ஆனாலும், ஜின்பிங்கின் இந்த நடவடிக்கை அவருக்குச் சீனாவில் பல எதிரிகளைச் சம்பாதித்தும் கொடுத்துள்ளது. ராணுவ அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. எதிரிகள் அதிகமானதாலேயே, நிரந்தர அதிபரானால் மட்டுமே தன்னை அரசியல் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள முடியுமென்பதையும் ஜின்பிங் உணர்ந்தார். அதற்காக, கச்சிதமாகக் காய் நகர்த்தினார், ஜின்பிங்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1976-ம் ஆண்டு, 'சீனாவின் தந்தை' என்று அழைக்கப்பட்ட மாசேதுங் மரணமடைந்தார். பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற டெங் ஜியோபிங்குக்கு உள்ளுக்குள் ஒரு பயம். வருங்காலத்தில் ஏதாவது ஒரு சீன அதிபர் தன்னை 'சர்வாதிகாரி' என்று அறிவித்துவிடக் கூடாதே என்பதுதான் அது. உடனடியாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்தார். சீனாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் அதிபர் பதவி வகிக்கக் கூடாது என்று புதிய சட்டம் வகுக்கப்பட்டது. இந்தச் சட்டத்தையே தனக்காக மாற்றவைத்துவிட்டார் ஜின்பிங். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு கூடி சீன அதிபர் பதவி விஷயத்தில் முக்கிய முடிவெடுத்தது.

மனைவியுடன் ஜின்பிங்
மனைவியுடன் ஜின்பிங்

அந்த முடிவு, சீனாவின் நிரந்தர அதிபர் பதவியை ஜின்பிங்குக்கு வழங்கும் விதத்தில் அமைந்தது. 'சீன அதிபர் பதவியில் இனிமேல் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தொடரலாம்' என்கிற புதிய விதி கொண்டுவரப்பட்டது. வாக்களிப்பில் பங்கேற்ற 3,000 பேரில் 2 பேர் மட்டுமே எதிர்த்து ஓட்டளித்தார்கள். 3 பேர் வாக்களிக்கவே வரவில்லை. 2,995 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தச் சட்டத்திருத்தம் வெற்றிபெற்றது. 2023-ம் ஆண்டுவரை ஜின்பிங்குக்குப் பதவிக்காலம் உள்ளது. புதிய சட்டத்தால் ஜின்பிங் சீனாவின் நிரந்தர அதிபராகத் தொடரவும் வாய்ப்புள்ளது.

பார்க்க, சற்றே கரடுமுரடாக இருக்கும் சீன அதிபர் காதல் திருமணம் முடித்தவர்தான். முதல் திருமணம் விவகாரத்தில் முடிய, சீனாவின் பிரபல பாடகியான Penng Liyuvan -ஐக் காதலித்து கரம் பற்றினார் ஜின்பிங். இந்தத் தம்பதிக்கு, ஒரு மகள் உண்டு. சீனாவில், 'ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை' என்ற சட்டம் நடைமுறையில் இருந்ததால், ஜின்பிங் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை. ஒரு குழந்தைச் சட்டத்தையும், 2015-ம் ஆண்டு ஜின்பிங் நீக்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism