Published:Updated:

தி.மலை: `கிரிவலப்பாதையில் நாத்திகரின் சிலை எதற்கு?’ - கருணாநிதி சிலை திறப்புக்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு

ஹெச்.ராஜா

"கருணாநிதி, தனக்குத் தானே சிலை வைத்துக்கொள்வதில் ஆசையுள்ளவர் என்பதால் இங்கு சிலை வைக்கிறார்களா... கிரிவலப்பாதையில் நாத்திகரின் சிலை எதற்கு... அவருடைய சிலையை வைப்பதே அரசியல்தான்." - ஹெச்.ராஜா ஆவேசம்.

தி.மலை: `கிரிவலப்பாதையில் நாத்திகரின் சிலை எதற்கு?’ - கருணாநிதி சிலை திறப்புக்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு

"கருணாநிதி, தனக்குத் தானே சிலை வைத்துக்கொள்வதில் ஆசையுள்ளவர் என்பதால் இங்கு சிலை வைக்கிறார்களா... கிரிவலப்பாதையில் நாத்திகரின் சிலை எதற்கு... அவருடைய சிலையை வைப்பதே அரசியல்தான்." - ஹெச்.ராஜா ஆவேசம்.

Published:Updated:
ஹெச்.ராஜா

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இந்த மாதம் 8-ம் தேதி வருகை தரவிருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்று மாலை... அண்ணா நுழைவாயில் மற்றும் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கவிருக்கிறார். இந்நிலையில், நேற்றைய தினம் (04.07.2022) திருவண்ணாமலைக்கு வந்திருந்த பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா, கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பக்தர்கள் கிரிவலம் நடக்கும் பாதையில், இந்து விரோதி கருணாநிதியின் சிலை வைப்பது, இந்துக்களை அவமானப்படுத்தும் செயல். கருணாநிதிக்கு சிலை வைக்கவிருந்த இடத்தில் 92 அடிக்குத்தான் பட்டா இருக்கிறது. ஆனால், 250 அடிக்கு பட்டா இருப்பதாகக் கூறியிருந்தார்கள். நீதிமன்றத்துக்கு வழக்கு போன பிறகுதான் 92 அடி என மாற்றியிருக்கிறார்கள். ஆக, அந்த இடத்தில் 250 அடி பட்டா உள்ளது என மாற்றிய அந்த வருவாய் அலுவலர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை.

திருவண்ணாமலையில் ஹெச்.ராஜா
திருவண்ணாமலையில் ஹெச்.ராஜா
எ.வ.வேலு ஏவிவிட்டால் என்ன வேணாலும் எழுதிக் கொடுப்பேன் என்றால்... அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை, எ.வ.வேலு-வின் ஊழியர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனவே, அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், பக்தர்களின் கண் உறுத்தும்படியாக நாத்திகரின் சிலை இருப்பது தவறு. ஆகவே, எல்லா ஆன்மிகச் சக்திகளையும் ஒன்றிணைத்து பலவித போராட்டங்கள் நடத்தப்படும். அதேபோல இங்குள்ள நுழைவுவாயிலில் எதற்கு அண்ணாவுடைய பெயர் இருக்கிறது... இது அண்ணாமலையாருக்குச் சொந்தமான ஊர், அண்ணாதுரைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்... எனவே, உடனடியாக `அண்ணாமலையார் நுழைவுவாயில்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல கிரிவலப்பாதையிலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை சேகர் பாபு அவர்கள் அடுத்த கிரிவலத்துக்குள்ளாக நீக்கித் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருணாநிதியின் சிலையை இங்கு வைப்பதே அரசியல்தான். உயிரோடு இருந்தபோதே தங்களுக்காகச் சிலை வைத்துக்கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இரண்டு பேர். ஒன்று ஈ.வெ.ரா., மற்றொருவர் கருணாநிதி. அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மக்கள் அதை உடைத்து எறிந்துவிட்டார்கள். இருந்தாலும் சிலைப் பிரியர் கருணாநிதி. தனக்குத் தானே சிலை வைத்துக்கொள்வதில் ஆசையுள்ளவர் என்பதால், இங்கு சிலை வைக்கிறார்களா... அது தேவை இல்லாதது. இங்கே எ.வ.வேலுவுக்கு பொறியியல் உட்பட இரண்டு கல்லூரிகள் இருக்கின்றன. மோடி அவர்கள், தமிழ்நாட்டுக்காக 15 மருத்துவக் கல்லூரிகளைக் கொடுத்தபோது, எனக்கும் ஒன்று வேண்டும் என அவர் வாங்கி வந்திருக்கிறாரே... பிச்சை கேட்டால் பிச்சை போடுவோம். நீங்க ஏன் போட்டீர்கள் என்று அதையெல்லாம் கேட்கக் கூடாது.

ஆகவே, அவருடைய இந்தக் கல்லூரிகளில் பல கலைஞர் சிலைகளை வைத்துக்கொள்ளட்டும். கிரிவலப்பாதையில் எதற்கு நாத்திகரின் சிலை என்கிறேன் நான்.

கருணாநிதி சிலை - மாதிரி படம்
கருணாநிதி சிலை - மாதிரி படம்

கருணாநிதி, நாத்திகர்" என்றார் ஆவேசமாக.

அப்போது, ``திருவாரூரில் ஓடாத தேரை ஓட வைத்தவரே கருணாநிதிதானே...’’ என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குக் கோபம்கொண்ட ஹெச்.ராஜா, ``அவருடைய அப்பாவின் காசில் இருந்து செலவு செய்தாரா... அந்தத் தேர் செய்ததிலும் எவ்வளவு திருடினார்கள் என யாருக்குத் தெரியும்” என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் - அமைச்சர் எ.வ.வேலு
முதலமைச்சர் ஸ்டாலின் - அமைச்சர் எ.வ.வேலு

பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப்போலவே ஒன்றரை மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று திரௌபதி முர்மு அவர்கள் வெற்றிபெறுவார்கள். தற்போது நடப்பது அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரம், அதில் நாங்கள் தலையிட முடியாது" என்றார் காட்டமாக.