Published:Updated:

``திராவிட மாடல் என்பது இந்துக்களுக்கு எதிரான மாடல்” - சொல்கிறார் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

``இந்து விரோத தீயசக்தி ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை எவ்வளவு விரைவாக தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்வதுதான் இந்துக்களுக்கு நல்லது.” - ஹெச்.ராஜா

``திராவிட மாடல் என்பது இந்துக்களுக்கு எதிரான மாடல்” - சொல்கிறார் ஹெச்.ராஜா

``இந்து விரோத தீயசக்தி ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை எவ்வளவு விரைவாக தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்வதுதான் இந்துக்களுக்கு நல்லது.” - ஹெச்.ராஜா

Published:Updated:
ஹெச்.ராஜா

கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும், ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்ற வேண்டுதலுக்காகவும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா விருதுநகர் மாவட்டத்துக்கு வந்திருந்தார். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் திரௌபதி முர்மு 75 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெறுவார். இந்த ஜனாதிபதித் தேர்தல், தமிழ்நாட்டில் போலியாக சமூகநீதி பேசுபவர்களை, செயல்படுபவர்களை அம்மணப்படுத்திக் காட்டியிருக்கிறது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

அதேபோல துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மார்க்கட் ஆல்வா என்பவர், அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் 3,600 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக காங்கிரஸின் முதல் குடும்பம் மீது குற்றம் சுமத்தியவர். இந்தக் காரணத்துக்காகவே அவர் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்படியிருக்கையில், காங்கிரஸ் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்றால், தேசத்துரோக காங்கிரஸ் ஆதரவு எனக்குத் தேவையில்லை என்று அவர் கூறியிருக்க வேண்டும். ஆக எதிர்க்கட்சிகளின் இந்த ஒட்டுமொத்தக் கூட்டமும் ஊழல், சமூகவிரோத தீயசக்திகளின் மொத்த உருவம். எனவே, துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ஜ்க்தீப் தன்கரும் வெற்றி பெறுவார்.

இருக்கன்குடி கோயிலைச் சுற்றிலும் தற்போது மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மணல் அள்ளத் தடை விதித்த நிலையில் தற்போது இந்தத் தடையை தி.மு.க. அரசு நீக்கியுள்ளது. மணல் அள்ளுவது, இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தையும், மண்ணின் ஸ்திரத்தன்மையையும் அழித்துவிடும் எனப் பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே, மணல் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவத்துக்கு அமைச்சர்கள் இதுவரையில் ஆறுதல் சொல்லாததற்குக் காரணம் இறந்த மாணவி இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். இந்து செத்தால் இழவுக்கு அழக்கூட ஆள் இல்லை என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணறு சம்பவத்துக்கும், சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த சம்பவத்துக்கும் தி.மு.க நேரில் சென்று ஆறுதல் சொன்னது. இறந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் அதற்குக் காரணம்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

திராவிட மாடல் என்பது இந்துக்களுக்கு எதிரான மாடல். தமிழ்நாட்டில் கிறிஸ்தவ ஆட்சித்தான் நடந்துகொண்டிருக்கிறது என மு.க.ஸ்டாலினே ஒருமுறை பேசியிருக்கிறார். ஆகவே, முழுக்க முழுக்க இந்துக்களுக்கு எதிராக, இந்து விரோத தீயசக்தி ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை எவ்வளவு விரைவாக தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செய்வதுதான் இந்துக்களுக்கு நல்லது” என்றார் ஆவேசமாக.