உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தேர்தலில் பா.ஜ.க-வும் ஆட்சி அமைக்க இருப்பதாக தெரிகிறது. ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி. தோல்வியிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்'' என்று தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism