Published:Updated:

ராகுல் காந்தி குறித்து அவதூறு பேச்சு; அஸ்ஸாம் முதல்வர் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு!

அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா

ராகுல் காந்தி குறித்து அவதூறாகப் பேசியதற்காக, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது, 504 மற்றும் 504(2) பிரிவுகளின் கீழ் ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரேவந்த் ரெட்டி, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குறித்து அவதூறாகப் பேசியுள்ளதாக ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இதுகுறித்து ரேவந்த் ரெட்டி அளித்தப் பேட்டியில், ``அஸ்ஸாம் முதல்வரின் கருத்து நாட்டின் பெண்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. இன்னும் தேசியத் தலைமை தேர்தல் ஆணையம் ஏன் அஸ்ஸாம் முதல்வரைக் கைது செய்ய உத்தரவிடவில்லை. முதல்வர் பதவியிலிருந்தே ஹிமந்தா பிஸ்வாவை பா.ஜ.க நீக்கவேண்டும். ஆனால், மாறாக பா.ஜ.க ஹிமந்தா பிஸ்வாவை ஆதரித்துவருகிறது" எனக் கூறியிருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிலையில், ரேவந்த் ரெட்டி அளித்த புகாரின் பேரில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை இந்திய தண்டனைச் சட்டம் 504 மற்றும் 504 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, ராகுல் காந்தி, ராஜீவ்காந்தியின் மகன்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என்பது போன்ற விமர்சனத்தை ராகுல் காந்தி மீது வைத்ததன் காரணமாகவே ரேவந்த் ரெட்டி போலீஸில் புகாரளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.