Published:Updated:

``ஜெய் ஸ்ரீ ராம்; ஹனுமானின் தீவிர பக்தன்; அவரின் அருள் உள்ளது" - குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``பொதுமக்களை ஊழலில் இருந்து விடுவிப்பது போன்ற ஒரு சிறப்புப் பணிக்கு கடவுள் என்னை அனுப்பியுள்ளார்” - அரவிந்த் கெஜ்ரிவால்!

``ஜெய் ஸ்ரீ ராம்; ஹனுமானின் தீவிர பக்தன்; அவரின் அருள் உள்ளது" - குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

``பொதுமக்களை ஊழலில் இருந்து விடுவிப்பது போன்ற ஒரு சிறப்புப் பணிக்கு கடவுள் என்னை அனுப்பியுள்ளார்” - அரவிந்த் கெஜ்ரிவால்!

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

விரைவில் நடக்க இருக்கும், குஜராத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்துக்கு, இரண்டு நாள் பயணமாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றிருந்தார். அதில் முதல்நாளான நேற்று, தாஹோடில் நடந்த பேரணியில் உரையாற்றிய போது ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா முழக்கங்களுடன் பேச்சை தொடர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது, ``ராமர் பக்தர்களை சிறப்பு ரயிலில் அயோத்திக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் நடக்கவிருக்கும் குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும். ஏனெனில் அது மக்களுக்காகவும் கடவுளுக்காகவும் பாடுபடுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் அடுத்த ஆண்டு தயாராகிவிடும். அந்தக் கோயிலுக்கு அனைவரும் செல்ல விரும்புகிறோம். ஆனால் பயணம், உணவு மற்றும் தங்குமிடம் என அதிகம் செலவழிக்க வேண்டிவரும். முழு குடும்பத்தையும் அழைத்துச் செல்ல இன்னும் நிறைய செலவாகும். குஜராத்தில் நாங்கள் ஆட்சி அமைத்தால், நாங்கள் உங்களை அயோத்திக்கு இலவச தரிசனத்திற்கு அழைத்துச் செல்வோம். நான் கிருஷ்ண ஜென்மாஷ்டமியன்று பிறந்தேன் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். பொதுமக்களை ஊழலில் இருந்து விடுவிப்பது போன்ற ஒரு சிறப்புப் பணிக்கு கடவுள் என்னை அனுப்பியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

நான் ஒரு மதவாதி, ஹனுமான் ஜியின் தீவிர பக்தன். எனக்கு ஹனுமான் ஜியின் எல்லையற்ற அருள் உள்ளது. குஜராத் மக்களுக்கு தரமான கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல், 10 லட்சம் அரசு வேலைகளை உருவாக்குதல் மற்றும் மாதந்தோறும் ரூ.3,000 வேலையின்மை உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.