Published:Updated:

``பஞ்சாப் மக்கள் தங்களின் உண்மையான உணர்வை காட்டியுள்ளனர்" - தேர்தல் முடிவு குறித்து அமரீந்தர் சிங்

அமரீந்தர் சிங்

காங்கிரஸ் கட்சியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து தனிகட்சி தொடங்கிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வும் ஆட்சி அமைக்க இருப்பதாகத் தெரிகிறது. ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் பதவியேற்க இருக்கிறார்.

இந்த நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தேர்தல் முடிவு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``மக்களின் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. மதம் மற்றும் சாதியத்திற்கு எதிராக வாக்களித்ததன் மூலம் பஞ்சாப்பியர்கள் தங்களுடைய உண்மையான உணர்வை காட்டியுள்ளனர்'' என்று பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism