Published:Updated:

``ஒவ்வொரு வீட்டு வாசலிலும் யாசகம் செய்யத் தயார்..!" - எதற்காகச் சொல்கிறார் கெஜ்ரிவால்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ( ட்விட்டர் )

டெல்லியில் செயல்பட்டுவரும் இலவச யோகா திட்டத்தை, அக்டோபர் 31-க்குப் பிறகு நீட்டிப்பதற்கு, துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என நேற்று செய்திகள் வெளியாகின.

``ஒவ்வொரு வீட்டு வாசலிலும் யாசகம் செய்யத் தயார்..!" - எதற்காகச் சொல்கிறார் கெஜ்ரிவால்?

டெல்லியில் செயல்பட்டுவரும் இலவச யோகா திட்டத்தை, அக்டோபர் 31-க்குப் பிறகு நீட்டிப்பதற்கு, துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என நேற்று செய்திகள் வெளியாகின.

Published:Updated:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ( ட்விட்டர் )

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே, டெல்லி அரசின் புதிய கலால் கொள்கை, ஆம் ஆத்மி அமைச்சர்களின் மீது சிபிஐ சோதனை எனத் தொடர்ச்சியாக மோதல்போக்கு நிகழ்ந்துவருகிறது.

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா
டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா

இந்த நிலையில், தற்போது புதிய பிரச்னையாக, டெல்லியில் அரசாங்கம் நடத்தும் இலவச யோகா திட்டத்தை, அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகு நீட்டிப்பதற்கு, துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என நேற்று பரவலாகப் பேசப்பட்டது. இதையடுத்து, கெஜ்ரிவால் தற்போது இலவச யோகா வகுப்புகள் நிறுத்தப்படாது என்றும், அதற்காக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் யாசகம் செய்யத் தயார் என்றும் கூறியிருக்கிறார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கெஜ்ரிவால், ``யோகா ஆசிரியர்கள் தொடர்ந்து வகுப்புகளை எடுப்பதாகக் கூறியிருக்கின்றனர். இதற்கு நாடு முழுவதிலுமிருந்து நன்கொடைக்கான அழைப்புகள் வந்திருக்கின்றன. எனவே யோகா வகுப்புகள் நிறுத்தப்படாது என்பதை இங்கு அறிவிக்க விரும்புகிறேன். மேலும், இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்காக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கிண்ணத்துடன் யாசகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்.

அதோடு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் திட்டத்தை நிறுத்தினால், டெல்லியில் உள்ள 2 கோடி மக்கள் அதற்குப் பதிலளிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், பஞ்சாப்பிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும். குஜராத்தில் வெற்றி பெற்றால், அங்கேயும் இது மாதிரியான வகுப்புகள் தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.