Published:Updated:

‘அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்’ - தன் மீதான விமர்சனத்துக்கு எம்.பி நுஸ்ரத் பதில்

நுஸ்ரத்

‘அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். நான் என்ன அணிய வேண்டும் என யாரும் சொல்ல வேண்டாம்’ என தன் மீதான விமர்சனத்துக்கு எம்.பி நுஸ்ரத் பதிலளித்துள்ளார்.

Published:Updated:

‘அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்’ - தன் மீதான விமர்சனத்துக்கு எம்.பி நுஸ்ரத் பதில்

‘அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். நான் என்ன அணிய வேண்டும் என யாரும் சொல்ல வேண்டாம்’ என தன் மீதான விமர்சனத்துக்கு எம்.பி நுஸ்ரத் பதிலளித்துள்ளார்.

நுஸ்ரத்

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை நுஸ்ரத் ஜஹான் சுமார் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக எம்.பியாக தேர்வாகியுள்ளார்.

நுஸ்ரத் திருமணம்
நுஸ்ரத் திருமணம்

கடந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தோடரில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைவரும் எம்.பியாக பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களுடன் இணைந்து எம்.பி நுஸ்ரத் ஜஹான் பதவியேற்கவில்லை.

கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும், நுஸ்ரத் ஜஹானுக்கும் கடந்த 19-ம் தேதி துருக்கில் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்துக்கொண்டனர். இதனால் தன் திருமணத்தை முடித்துவிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்னதான் நாடாளுமன்றம் வந்துள்ளார் நுஸ்ரத்.

ட்வீட்
ட்வீட்

இஸ்லாமிய பெண்ணான நுஸ்ரத், ஜெயின் மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்டதால் அவர்கள் முறைப்படி நெற்றில் குங்குமம், தாலி, புடவை, கை நிறைய வளையல் என முற்றிலும் மணப்பெண்ணாக நாடாளுமன்றம் வந்து பதவியேற்றுக்கொண்டார். நுஸ்ரத் இஸ்லாமிய விதிமுறைகளை மீறியதால் அவருக்கு ‘ஃபத்வா’ வழங்கப்பட்டுள்ளது. (ஃபத்வா - இஸ்லாமிய முறைப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்) மேலும் இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் நுஸ்ரத். அதில், “ சாதி, மதம் ஆகிய தடைகளுக்கு அப்பாற்பட்ட இந்தியாவை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நான் இன்னும் முஸ்லீமாகவே உள்ளேன். நான் எது அணிய வேண்டும் என யாரும் சொல்ல வேண்டாம். என் மதத்தின் மீதான விசுவாசத்தை தாண்டி அனைத்து மதங்களின் விலைமதிபற்ற கோட்பாடுகளையும் நான் நம்புகிறேன். மதிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.