Published:Updated:

``திரிணாமுல் காங்கிரஸுக்கு தைரியமிருந்தால் கைதுசெய்யட்டும்" - பாஜக தலைவர் சவால்

திலீப் கோஷ் ( ட்விட்டர் )

"இந்தியாவிலுள்ள பெண்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க திலீப் கோஷின் கருத்துகளை கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்." - திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கோரிக்கை.

``திரிணாமுல் காங்கிரஸுக்கு தைரியமிருந்தால் கைதுசெய்யட்டும்" - பாஜக தலைவர் சவால்

"இந்தியாவிலுள்ள பெண்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க திலீப் கோஷின் கருத்துகளை கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்." - திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கோரிக்கை.

Published:Updated:
திலீப் கோஷ் ( ட்விட்டர் )

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அநாகரிகக் கருத்து தெரிவித்ததாக வங்காள பா.ஜ.க முன்னாள் தலைவர் திலீப் கோஷைச் சுற்றி தற்போது சர்ச்சை தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் வங்காள பா.ஜ.க முன்னாள் தலைவர் திலீப் கோஷ் திரிணாமுல் காங்கிரஸ் அரசையும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் தரக்குறைவாக விமர்சித்தாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆளுநர் ஜக்தீப் தன்கரை சந்தித்தனர். அப்போது,"திலீப் கோஷின் முதல்வர் மம்தா குறித்த கருத்துகள் அவமரியாதையானவை. மேலும், அவை பெண்கள் மீதான, பெண்களின் நடத்தையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தியாவிலுள்ள பெண்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க திலீப் கோஷின் கருத்துகளை கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ஒரு பெண்ணின் நாகரிகம் கேள்விக்குறியாகியிருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருக்க மாட்டீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் அரசியலமைப்பை நிலைநிறுத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் திலீப் கோஷின் இந்தக் கருத்துகளைக் கண்டிக்கிறோம். திலீப் கோஷ் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து, திலீப் கோஷ் செய்தியாளர் சந்திப்பின்போது, "என்னைக் கைதுசெய்ய வேண்டும் என்று ஆளுநரின் காலில் விழுகிறது திரிணாமுல் காங்கிரஸ். ஆனால், அதே ஆளுநரை முதல்வர் அவர்களே தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெட்கமற்றவர்கள். திரிணாமுல் காங்கிரஸுக்கு தைரியமிருந்தால் என்னைக் கைதுசெய்யட்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இருவரும் மாறி மாறிக் குற்றம்சாட்டிக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.