Published:Updated:

``நான் இந்தியில் கேட்கவில்லை...!" - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரை ஆங்கிலத்தில் பேசவைத்த கனிமொழி

கனிமொழி - பியூஷ் கோயல்

நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்தார்.

``நான் இந்தியில் கேட்கவில்லை...!" - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரை ஆங்கிலத்தில் பேசவைத்த கனிமொழி

நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்தார்.

Published:Updated:
கனிமொழி - பியூஷ் கோயல்

மக்களவை உறுப்பினர்கள் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை பற்றிய கேள்விகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முன்வைத்தனர். அவர் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். அப்போது பேசிய தி.மு.க எம்.பி.கனிமொழி, ``தமிழக அரசாங்கம் ஒவ்வொரு ரேஷன் கார்டு அட்டைதாரருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக விநியோகம் செய்துவருகிறது. அது மட்டுமல்லாமல் நிறைய திட்டங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. ரேஷன் என்பது ஒரு மாநிலம் சார்ந்த விவகாரம்தான். இந்த நிலையில், ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கும் பொருள்களுக்கு யார் நிதி ஒதுக்குவது?'' என்று கேள்வி எழுப்பினார்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

கனிமொழியின் இந்தக் கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் கூறினார். அப்போது குறுக்கிட்ட கனிமொழி, ``உங்களுக்கு ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் இந்தியில் பேசினால் அதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. நான் ஆங்கிலத்தில்தான் கேள்வி கேட்டேன். நீங்களும் ஆங்கிலத்தில் பதில் கூறுங்கள்" என்றார். அதையடுத்து, பியூஷ் கோயல் , ``சகோதரியை மதிக்கிறேன்" என்று கூறிவிட்டு பின்னர் ஆங்கிலத்தில் பதிலளித்தார். ``தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து வகை உணவு வகைகளுக்கும் மத்திய அரசே நிதி வழங்கும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism