Published:Updated:

``அந்த நிகழ்வுக்கு பிறகு ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை!” - 2 மணி நேர விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ்

``மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, அவரின் உடல்நலன் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொள்வேன்.” - ஓ.பன்னீர்செல்வம்.

``அந்த நிகழ்வுக்கு பிறகு ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை!” - 2 மணி நேர விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம்

``மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, அவரின் உடல்நலன் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொள்வேன்.” - ஓ.பன்னீர்செல்வம்.

Published:Updated:
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, இந்த மரணம் குறித்து விசாரிக்க அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 2019-ல் உச்ச நீதிமன்றம் இதற்குத் தடை விதித்ததையடுத்து இந்த விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இது தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்கியது.

இதில் முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளித்துவந்த அப்போலோ மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. பின்னர் இரண்டாம்கட்ட விசாரணைக்காக, ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

முன்னதாக பலமுறை இது தொடர்பாக விசாரிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பட்டிருந்தும் ஒரு முறைகூட ஆஜராகாத ஓ.பன்னீர்செல்வம், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகி, ``ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டன, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியாது" என வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம்

இந்த விசாரணையில், ``2016, செப்டம்பர் 22 -ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்குத் தெரியாது. சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்துகொண்டேன். அடுத்த நாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களைக் கேட்டறிந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்துகொண்டபோது ஜெயலலிதாவைப் பார்த்தேன். அதற்குப் பின்னர் அவரைப் பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன்" என ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.

மேலும், விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார், ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார் என ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, ``பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது” என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலை 11:30 மணிக்குத் தொடங்கிய விசாரணை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நடைபெற்ற காவிரிக் கூட்டம் தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது என்றும், அறிக்கை வந்த பிறகுதான் தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

மேலும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவிடம் கூட்டம் தொடர்பாகக் கேட்டபோது, முதலமைச்சர் தனக்கு டிக்ட்டேட் செய்ததாகத் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

``மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, அவரின் உடல்நலன் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொள்வேன்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

காவிரி கூட்டத்துக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு இதயப் பிரச்னை ஏற்பட்டு, உடல்நலனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் அவர் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு நான் முதல்வரின் உடல்நிலை குறித்து விஜயபாஸ்கரிடம் கேட்டதற்கு, `இதயப் பிரச்னை இருந்ததைக் கூறியதாக’ ஓபிஎஸ் ஆணையத்தில் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டபோது என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், யார் முடிவு செய்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது என்பது தொடர்பாகவும் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது உணவு இடைவேளைக்காக பன்னீர்செல்வம் வெளியே வந்திருக்கிறார். மதியம் 3 மணிக்கு மேல் மீண்டும் விசாரணை நடைபெறும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism