Published:Updated:

22 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த காங்கிரஸ் தேர்தல்; ``இதற்காகத்தான் நெடுங்காலம் காத்திருந்தேன்"- சோனியா

சோனியா காந்தி

கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், காந்தி குடும்பத்திலிருந்து யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

22 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த காங்கிரஸ் தேர்தல்; ``இதற்காகத்தான் நெடுங்காலம் காத்திருந்தேன்"- சோனியா

கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், காந்தி குடும்பத்திலிருந்து யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

Published:Updated:
சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்துவருவதால், கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்விதமாக, கட்சிக்குள் தேர்தல் நடைபெற்றுவருகிறது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், காந்தி குடும்பத்திலிருந்து யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேசமயம், யாரையும் ஒருசார்பாக ஆதரிக்கவும்போவதில்லை எனவும் காந்தி குடும்பத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது.

தரூர் Vs கார்கே!
தரூர் Vs கார்கே!

இதனால் தேர்தல் வேட்பாளர்களான சசி தரூர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உட்பட பலரும் வாக்களித்தனர். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள பாரத் ஜோடோ யாத்ரா முகாமில் வாக்களித்தார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இந்த நிலையில், டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் மகள் பிரியங்கா காந்தியுடன் வாக்களித்த சோனியா காந்தி, ``இதற்காகத்தான் நெடுங்காலமாக நான் காத்திருந்தேன்" என்று கூறியிருக்கிறார். முன்னதாக 2000-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஜிதேந்திர பிரசாத்தை தோற்கடித்து சோனியா காந்தி தலைவராக வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கட்சியில் முதன்முறையாக இன்று வாக்களித்தார். இதற்கு முன்னதாக 1997, 2000-ம் ஆண்டுகளில் தேர்தல் நடந்தபோது, 1997-ல் அவர் காங்கிரஸிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸில் சேர்ந்திருந்தார். பின்னர் 2003-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.