Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல்: ``நான் வேட்பாளரா..?" - பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விளக்கம்!

நிதிஷ் குமார் - மோடி

குடியரசுத் தலைவர் வேட்பாளராக, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பெயர் அடிபட்டுவரும் நிலையில், தனக்கு அதில் விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. அதனால், ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியிலான ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிதிஷ் குமாரை நிறுத்த ஆலோசித்துவருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இது தொடர்பாகத் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். ``நான் குடியரசுத் தலைவர் வேட்பாளரா? இதைக் கேள்விப்பட்டு நானே மிகவும் ஆச்சர்யப்பட்டேன். இது தொடர்பான விஷயங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது போன்ற விவாதங்கள் அர்த்தமற்றவை. எனக்குக் குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற விருப்பமோ, ஆசையோ இல்லை'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism