Published:Updated:

``வில் அம்பு சின்னத்தை மீட்டிருக்கிறேன்: இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி'' - ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடமிருந்து வில் அம்பு சின்னத்தை மீட்டிருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

``வில் அம்பு சின்னத்தை மீட்டிருக்கிறேன்: இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி'' - ஏக்நாத் ஷிண்டே

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடமிருந்து வில் அம்பு சின்னத்தை மீட்டிருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவின் தேர்தல் சின்னமான வில் அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு ஒதுக்கியிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இந்தத் தீர்ப்பு உத்தவ் தாக்கரேவை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த நிலையில், `இது ஜனநாயகப் படுகொலை' என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே, `உண்மை வெற்றிபெற்றிருக்கிறது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி' எனத் தெரிவித்திருக்கிறார். ஜனநாயகப் படுகொலை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருப்பது குறித்து அவர், ``முடிவுகள் தங்களுக்கு எதிராகச் செல்லும்போது `ஜனநாயகப் படுகொலை’, `ஜனநாயகத்துக்கு ஆபத்து’ என்று கூச்சலிடுவது வழக்கம்தான்.

``வில் அம்பு சின்னத்தை மீட்டிருக்கிறேன்: இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி'' - ஏக்நாத் ஷிண்டே

இது இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது. சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் அவர்கள் அடமானம்வைத்திருந்தார்கள். நான் இப்போது அதை மீட்டிருக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் தன்னிச்சையான அமைப்புகள். அவற்றை இந்த அளவுக்குக் கீழ்த்தரமாக விமர்சிக்கக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் முடிவு அவர்களுக்குச் சாதகமாக வந்தால் ஜனநாயகம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று சொல்வார்கள். இப்போது எதிராக வந்திருப்பதால் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசுகிறார்கள். தாக்கரே அணியினர் அனுதாபத்தைப் பயன்படுத்தி, கட்சித் தொண்டர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறார்கள். பால்தாக்கரேவின் கொள்கைகளும் சிந்தனைகளும் வெற்றிபெற்றிருக்கின்றன. எங்களை, `திருடர்கள்’ என்று சொல்கிறார். 50 எம்.எல்.ஏ-க்களும், 13 எம்.பி-க்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் திருடர்களா... உங்களை விட்டுச் சென்ற அனைவரும் திருடர்கள்.

நீங்கள் மட்டும்தான் சரியானவர். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். எங்களது அணியில் அதிக அளவில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருக்கிறது. 2019-ம் ஆண்டு அவர்கள் பால்தாக்கரேவின் சிந்தனைகளை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் விற்பனை செய்துவிட்டனர். 2019-ம் ஆண்டே கட்சிக்கான உரிமையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். நீங்கள் சொத்துகளுக்கு வேண்டுமானால் உரிமையாளர்களாக இருக்கலாம். ஆனால் பால்தாக்கரேவின் கொள்கைகளுக்கு அல்ல. தேர்தல் ஆணையத்தின் முடிவு பாபாசாஹேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்துக்குக் கிடைத்த வெற்றி'' என்று தெரிவித்திருக்கிறார்.

சரத் பவார்
சரத் பவார்

இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ``இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. முடிவு கொடுக்கப்பட்டுவிட்டால் அது குறித்து விவாதிக்கக் கூடாது. முடிவை ஏற்றுக்கொண்டு புதிய சின்னத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். புதிய சின்னம் மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது'' என்று தெரிவித்திருக்கிறார்.