இம்ரான் கான் 2022-ம் ஆண்டு, பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, ஷெபாஸ் ஷெஃரீப் பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் எனப் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்த நிலையில், இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில், அவரை 14 நாள்கள் காவலில் வைக்கத் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (National Accountability Bureau) கோரியிருக்கிறது.
இந்த வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் லண்டன், கனடாவிலுள்ள பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையே இன்று நீதிமன்ற விசாரணையின்போது இம்ரான் கான் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், "நான் 24 மணி நேரமாகக் கழிவறைக்குச் செல்லவில்லை. அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்களோ என நான் பயப்படுகிறேன்... என்னை மெதுவாகக் கொல்லும் ஊசிகளைச் செலுத்துகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.