Published:Updated:

``32 கிலோ உடல் எடை குறைத்ததால் ரூ.2,300 கோடி கொடுத்தார்!" - நிதின் கட்கரியைப் பாராட்டும் பாஜக எம்.பி

எம்.பி.அனில்

32 கிலோ உடல் எடையைக் குறைத்ததால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,300 கோடியை ஒதுக்கியிருப்பதாக பாஜக எம்.பி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

``32 கிலோ உடல் எடை குறைத்ததால் ரூ.2,300 கோடி கொடுத்தார்!" - நிதின் கட்கரியைப் பாராட்டும் பாஜக எம்.பி

32 கிலோ உடல் எடையைக் குறைத்ததால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,300 கோடியை ஒதுக்கியிருப்பதாக பாஜக எம்.பி தெரிவித்திருக்கிறார்.

எம்.பி.அனில்

உடல் எடையைக் குறைத்தால் அதற்குத் தக்கபடி உனக்குப் பணம் தருகிறேன் என்று சொன்னால் யாராவது அதை செய்யாமல் இருப்பார்களா... ஒருமுறை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனிக்குச் சென்றபோது பா.ஜ.க எம்.பி அனில் ஃபிரோஜியா அதிக உடல் எடையுடன் இருந்தார். உடனே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்கரி, ``எம்.பி அனில் உடல் எடையைக் குறைத்தால் அதற்கு தக்கபடி அவரது தொகுதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும்" என்றும், ``அவர் குறைக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்" என்றும் சொல்லியிருந்தார். இது கடந்த பிப்ரவரி மாதம் நடந்திருந்தது. அமைச்சரின் சவாலை அனில் ஏற்றுக்கொண்டார். அமைச்சர் கட்கரியின் பேச்சைக் கேட்டு உடனே எம்.பி அனில் தன் உடல் எடையைக் குறைக்க தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இதன் மூலம் அவர் உடல் எடை குறைய ஆரம்பித்தது. இது குறித்துப் பேசும் அனில், ``அமைச்சரின் சவாலை ஏற்று இதுவரை 32 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

என் உடல் எடையைக் குறைப்பதன் மூலம் உஜ்ஜைனிக்குக் கூடுதல் நிதி கிடைக்கிறது என்றால் நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்கத் தயாராக இருக்கிறேன். எனது தொகுதியின் வளர்ச்சிக்காக என் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். நான் 32 கிலோ எடையைக் குறைத்துக்கொண்ட பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து இது குறித்து தெரிவித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதோடு சொன்னபடி உடனே எனது தொகுதி மேம்பாட்டுக்கு ரூ.2,300 கோடியை ஒதுக்கீடு செய்தார்.

உடல் எடையைக் குறைக்க தினமும் காலை 5:30 மணிக்கு எழுந்துவிடுகிறேன். எழுந்தவுடன் நடைப்பயிற்சி, ஓடும் பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகாவில் ஈடுபடுகிறேன். ஆயுர்வேத முறைப்படி உணவுகளை எடுத்துக்கொள்கிறேன்" என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.