Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆகிறாரா யஷ்வந்த் சின்ஹா?

யஷ்வந்த் சின்ஹா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தக்கூடும் எனத் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின.

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆகிறாரா யஷ்வந்த் சின்ஹா?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தக்கூடும் எனத் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின.

Published:Updated:
யஷ்வந்த் சின்ஹா

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. ஆளும் பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதிசெய்யப்படாத நிலையில், கடந்த 15-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மம்தா 22 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தன. காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்
ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்

மம்தா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பொது வேட்பாளர் தேர்வில் முன்மொழியப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மூவருமே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார்
சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார்

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான அடுத்தகட்ட முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா
ட்வீட்

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும்விதமாக யஷ்வந்த் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், ``திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா ஜி எனக்கு வழங்கிய மரியாதை, கௌரவத்துக்காக நான் அவருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்துக்காக நான் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக உழைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. மம்தா என்னுடைய இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்" என ட்வீட் செய்திருக்கிறார்.

இதன் மூலம் குடியரசுத் தேர்தலுக்கு யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism