Published:Updated:

``டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நேரில் பார்த்தோம்!” - ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

``அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒருசில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார்.” - ஓ.பன்னீர்செல்வம்.

``டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நேரில் பார்த்தோம்!” - ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம்

``அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒருசில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார்.” - ஓ.பன்னீர்செல்வம்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது குறித்து விசாரிக்க, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்துவருகிறார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், ``அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒருசில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

இதை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்துள்ளேன், பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை. அரசாங்கப் பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவிதத் தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டன என்பது எனக்குத் தெரியாது” என்றார்.

தொடர்ந்து, ``திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அறவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரைத் தேர்வு செய்தது ஜெயலலிதாதான். மேலும், இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்குத் தெரியும்" எனவும் தெரிவித்திருக்கிறார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தீவிரம்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தீவிரம்

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் கேள்வி எழுப்ப முயன்றபோது அப்போலோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். "சிகிச்சை தொடர்பாக எதுவும் தனக்குத் தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் நேற்றே வாக்குமூலம் அளித்த நிலையில் இன்று அது தொடர்பான கேள்விகளை எழுப்பக் கூடாது" என வாதிட்டார்.

அதற்கு ஆணைய வழக்கறிஞர், "ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துத்தான் கேள்வி எழுப்பக் கூடாது. வியாதி இருந்தது உங்களுக்குத் தெரியுமா எனக் கேள்வி எழுப்பலாம்" என பதிலளித்தார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இதைத் தொடர்ந்து, "மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும்போது முந்தைய சாட்சிகள் கூறிய கருத்துகளை முன்கூட்டியே வழங்க வேண்டும், மேலும், மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும்" என அப்போலோ வழக்கறிஞர் தெரிவித்தற்கு "உங்களின் குறுக்கீடு பதிவு செய்யப்பட்டது" என ஆறுமுகசாமி ஆணையம் பதிலளித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து விசாரணையில், ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு மூன்று அமைச்சர்கள் சென்று அவரை நேரில் பார்த்ததாக விசாரணை ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்,

``டிசம்பர் 4-ம் தேதி அப்போதைய ஆளுநர் அப்போலோ மருத்துவமனை வந்திருந்தும், ஜெயலலிதாவைச் சந்திக்காமல் அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து தனக்கு நினைவில்லை” என விளக்கம் அளித்தார்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

``டிசம்பர் மாதம் 4 -ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த பின்பாக மீண்டும் இதயத் துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது எனக்குத் தெரியாது. ஆனால் மாலை 05:30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம்” எனவும் தெரிவித்தார்,

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism