Published:Updated:

`இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கையில்லை; வணங்க மாட்டேன்!' - புத்த மத நிகழ்ச்சியில் டெல்லி அமைச்சர்

ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் ( twitter )

இந்த ஆண்டு விஜயதசமி நாளான அக்டோபர் 5 அன்று, டெல்லி ஜாண்டேவாலனிலுள்ள டாக்டர்.அம்பேத்கர் பவனில் சுமார் 10 ஆயிரம் இந்துக்கள், புத்த மதத்துக்கு மாறினர்.

`இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கையில்லை; வணங்க மாட்டேன்!' - புத்த மத நிகழ்ச்சியில் டெல்லி அமைச்சர்

இந்த ஆண்டு விஜயதசமி நாளான அக்டோபர் 5 அன்று, டெல்லி ஜாண்டேவாலனிலுள்ள டாக்டர்.அம்பேத்கர் பவனில் சுமார் 10 ஆயிரம் இந்துக்கள், புத்த மதத்துக்கு மாறினர்.

Published:Updated:
ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் ( twitter )

`இந்து மதத்தில் பிறந்துவிட்டேன். ஆனால், ஒருபோதும் இந்துவாக இறக்க மாட்டேன்’ என்று சூளுரைத்த டாக்டர் அம்பேத்கர், இந்து மதத்தின் வர்ணாசிரம சாதிய அமைப்பு மற்றும் தீண்டாமைகளை எதிர்த்து, 1956-ல் விஜயதசமி நாளான அக்டோபர் 14 அன்று பல லட்சம் பேருடன் புத்த மதத்துக்கு மாறினார். அந்த வரிசையில் இந்த ஆண்டு விஜயதசமி நாளான அக்டோபர் 5 அன்று, டெல்லி ஜாண்டேவாலனிலுள்ள டாக்டர் அம்பேத்கர் பவனில் சுமார் 10 ஆயிரம் இந்துக்கள், புத்த மதத்துக்கு மாறினர்.

டெல்லியில் 10.000 இந்துக்கள் புத்த மதத்தைத் தழுவினர்
டெல்லியில் 10.000 இந்துக்கள் புத்த மதத்தைத் தழுவினர்
twitter

இந்த நிகழ்ச்சியில், டெல்லி மாநில சமூக நலத்துறை ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டதையும், அதில் அவர் உரையாற்றியதையும் விமர்சித்த பா.ஜ.க., அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. மேலும், இந்த மதமாற்ற நிகழ்ச்சியில் ராஜேந்திர பால் கௌதம் உரையாற்றியதாக வெளியான வீடியோவில், ``எனக்கு பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர்மீது நம்பிக்கை இல்லை. அவர்களை நான் வணங்கவும் மாட்டேன். கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் ராமர், கிருஷ்ணர்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்களையும் நான் வணங்க மாட்டேன். புத்தர், விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பவும் இல்லை, நம்பவும் மாட்டேன். இது வெறும் பைத்தியக்காரத்தனம். மேலும் இது பொய்ப் பிரசாரம் என்று நான் நம்புகிறேன்" என ராஜேந்திர பால் கூறியதாக பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது.

ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம்
ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம்
twitter

அதோடு டெல்லி பா.ஜ.க., தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஆம் ஆத்மியின் இந்து விரோத முகம் எல்லோர் முன்னிலையிலும் வெளிவந்துவிட்டது. கெஜ்ரிவாலின் அமைச்சர் இந்துக்களுக்கு எதிராக எப்படி விஷத்தைக் கக்குகிறார் என்று பாருங்கள்.  பொதுமக்கள் விரைவில் இந்த, இந்து விரோத ஆம் ஆத்மிக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என இந்தியில் விமர்சித்திருக்கிறது.

இருப்பினும், இது தொடர்பாக தனியார் ஊடகத்திடம் விளக்கமளித்த அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, ஒவ்வொரு மதத்தையும் தான் மதிப்பதாகவும், புத்த மதத்தை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்றும் கூறினார்.