Published:Updated:

``அரசாங்கத்துக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாகச் செயல்படும் குடியரசுத் தலைவர் தேவையில்லை" - யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா

``அரசியலமைப்பின் பாரபட்சமற்ற பாதுகாவலராகப் பணியாற்றும் குடியரசுத் தலைவர்தான் தேவையே தவிர, அரசாங்கத்துக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாகச் செயல்படுபவர் அல்ல." - யஷ்வந்த் சின்ஹா

``அரசாங்கத்துக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாகச் செயல்படும் குடியரசுத் தலைவர் தேவையில்லை" - யஷ்வந்த் சின்ஹா

``அரசியலமைப்பின் பாரபட்சமற்ற பாதுகாவலராகப் பணியாற்றும் குடியரசுத் தலைவர்தான் தேவையே தவிர, அரசாங்கத்துக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாகச் செயல்படுபவர் அல்ல." - யஷ்வந்த் சின்ஹா

Published:Updated:
யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் வேட்பாளர்களான திரௌபதி முர்முவும், யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மறுபுறம் அரசியல் கட்சிகளும், தங்களின் ஆதரவு யாருக்கென்று தெரிவித்துவருகின்றனர். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத ஜெகன்மோகன் ரெட்டியும், மாயாவதியும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா
திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா

மேலும் யஷ்வந்த் சின்ஹா மாநிலம்வாரியாக எதிர்கட்சித் தலைவர்களைச் சந்தித்து தனக்கான ஆதரவைத் திரட்டிவருகிறார். அந்த வகையில் இன்று மாலை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை யஷ்வந்த் சின்ஹா சந்திக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பதவி போட்டி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ``இந்தியாவுக்கு அரசியலமைப்பின் பாரபட்சமற்ற பாதுகாவலராகப் பணியாற்றும் குடியரசுத் தலைவர்தான் தேவையே தவிர, அரசாங்கத்துக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாகச் செயல்படுபவர் அல்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் தனக்கென சொந்த மனசாட்சியைக் கொண்டிருக்க வேண்டும். குடியரசின் நிர்வாகமோ அல்லது பிற அமைப்புகளோ அரசியலமைப்பு கோட்பாடுகளிலிருந்து விலகும்போதெல்லாம், எந்தவித அச்சமோ தயவோ இல்லாமல் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். அதன்படி, அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உயரிய பார்வைக்குத் தகுதியான குடியரசுத் தலைவராக நான் பணியாற்றுவேன் என்பது இந்திய மக்களுக்கு நாள் அளிக்கும் ஆணித்தரமான உறுதி" என்று கூறினார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.