Published:Updated:

ரூபாய் நோட்டு சர்ச்சை: ``மத நம்பிக்கைகளை கெஜ்ரிவால் கேலி செய்கிறார்!" - பிருந்தா காரத்

பிருந்தா காரத்

``மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவர் கேலி செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கும் ஒரு எல்லை உண்டு." - பிருந்தா காரத்

ரூபாய் நோட்டு சர்ச்சை: ``மத நம்பிக்கைகளை கெஜ்ரிவால் கேலி செய்கிறார்!" - பிருந்தா காரத்

``மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவர் கேலி செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கும் ஒரு எல்லை உண்டு." - பிருந்தா காரத்

Published:Updated:
பிருந்தா காரத்

நாடு செழிக்க, ரூபாய் நோட்டுகளில் ஒருபக்கம் காந்தி படமும், மறுபக்கம் விநாயகர், லட்சுமி படமும் வைக்கவேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இதன்காரணமாக, கெஜ்ரிவால் மீது பா.ஜ.க தலைவர்கள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இந்த நிலையில் கெஜ்ரிவாலின் இத்தகைய கூற்றுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிருந்தா காரத்
பிருந்தா காரத்

இதுதொடர்பாக தனியார் ஊடகத்திடம் பேசிய பிருந்தா காரத், ``மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவர் கேலி செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கும் ஒரு எல்லை உண்டு. இதுவரை சுகாதாரம், கல்வி மற்றும் மேம்பாடு பற்றியே கெஜ்ரிவால் பேசி வந்தார். ஆனால், இப்போது, ​​பா.ஜ.க.வுடன் போட்டியிடும் அளவுக்கு அவரை அவநம்பிக்கைக்கு ஆளாக்குவது என்னவென்றால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவர் தவறாகப் பயன்படுத்துவதுதான். டெல்லி முதல்வரின் இத்தகைய கருத்து கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை மாசுபடுத்துகிறது. மேலும், அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை மக்கள் எதிர்த்து நிற்க வேண்டும்" எனக் கூறினார்.