Published:Updated:

`நட்பு பாராட்டிய மோடி’... `பிரதமரின் பேச்சுத் தந்திரம் தெரியும்’ - அசோக் கெலாட் பதிலடி

அசோக் கெலாட் - மோடி

``ஆரம்பத்தில் பிரதமர் மோடி தனது உரையை, `என் நண்பர் அசோக் கெலாட்’ என்று தொடங்குவார்... பின்னர் எனது அரசைக் கடுமையாக விமர்சிப்பார் என்று எனக்குத் தெரியும்" - அசோக் கெலாட்

Published:Updated:

`நட்பு பாராட்டிய மோடி’... `பிரதமரின் பேச்சுத் தந்திரம் தெரியும்’ - அசோக் கெலாட் பதிலடி

``ஆரம்பத்தில் பிரதமர் மோடி தனது உரையை, `என் நண்பர் அசோக் கெலாட்’ என்று தொடங்குவார்... பின்னர் எனது அரசைக் கடுமையாக விமர்சிப்பார் என்று எனக்குத் தெரியும்" - அசோக் கெலாட்

அசோக் கெலாட் - மோடி

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்  நேற்று ராஜஸ்தான் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, "ஏப்ரல் 12-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் முதல் டெல்லி  கன்டோன்மென்ட்  இடையேயான வந்தே பாரத் ரயிலைக் காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது 'என் நண்பர் அசோக் கெலாட்' என்று தனது உரையைத் தொடங்கி, அசோக் கெலாட் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எங்கள் நட்புக்கு வலிமை சேர்க்கிறது. என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி’ எனப் புத்திசாலித்தனமாகப் பேசி முடித்தார்.

அசோக் கெலாட் - மோடி
அசோக் கெலாட் - மோடி
ட்விட்டர்

நான் நீண்டகாலமாக அரசியலில் இருப்பதால் பிரதமர் மோடியின் இந்த தந்திர வித்தைகள் எல்லாம் எனக்குப் புரிகிறது. ஆரம்பத்தில் பிரதமர் மோடி தனது உரையை "நண்பர்" எனத் தொடங்குவார்... பின்னர் எனது அரசைக் கடுமையாக விமர்சிப்பார் என்று எனக்குத்  தெரியும். மேலும், அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது,  இந்தியாவிலிருந்த அனைத்து முதல்வர்களிலும் மூத்தவர் நான்தான் என்று பிரதமர் மோடியே மங்கரில் நடந்த விழாவின்போது குறிப்பிட்டிருந்தார்.

அதனால், நான் முதல்வர்களில் மூத்தவனாக இருப்பதால், எனது ஆலோசனையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நாடு முழுவதும் பிரதமர் மோடி அமல்படுத்த வேண்டும். இதுவே உங்களுக்கு மூத்தவனான எனது முதல் அறிவுரை.... ராஜஸ்தானுக்கு நாங்கள் செய்த திட்டத்தை நீங்கள்  நாட்டுக்காகச் செயல்படுத்த வேண்டும். கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் குதிரை வியாபாரம் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் அரசியலில் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒரு புதிய உதாரணத்தை உருவாக்கியிருக்கிறார்கள்" எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.