Published:Updated:

"பாரத் ஜோடோவை நிறுத்திவிட்டு ராகுல் குஜராத்துக்குச் செல்ல வேண்டும்"- காங்கிரஸ் மூத்த தலைவர் கோரிக்கை

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை

182 சட்டப்பேரவை இடங்களைக்கொண்ட குஜராத்தில், காங்கிரஸ் கடந்த 27 ஆண்டுகளில் ஒரு முறைகூட ஆட்சியமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"பாரத் ஜோடோவை நிறுத்திவிட்டு ராகுல் குஜராத்துக்குச் செல்ல வேண்டும்"- காங்கிரஸ் மூத்த தலைவர் கோரிக்கை

182 சட்டப்பேரவை இடங்களைக்கொண்ட குஜராத்தில், காங்கிரஸ் கடந்த 27 ஆண்டுகளில் ஒரு முறைகூட ஆட்சியமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை

ஐந்து மாநிலத் தேர்தல் கடந்த மார்ச்சில் முடிவடைந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் வரும் நவம்பர் 12-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று, சென்ற வாரம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. குஜராத் மாநிலத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்த்த வேளையில், அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை

இப்படியாக அடுத்தடுத்து தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, 2024-ம் ஆண்டு லோக் சபா தேர்தலை இலக்காகவைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி-யும், கோவா மாநில முன்னாள் முதல்வருமான பிரான்சிஸ்கோ சர்தின்ஹா, ``பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்திவிட்டு ராகுல் காந்தி குஜராத்துக்குச் செல்ல வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கோவா முன்னாள் முதல்வர் பிரான்சிஸ்கோ சர்தின்ஹா எம்.பி
கோவா முன்னாள் முதல்வர் பிரான்சிஸ்கோ சர்தின்ஹா எம்.பி
ட்விட்டர்

இன்று நடைபெற்றுவரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்துவிட்டுப் பேசிய பிரான்சிஸ்கோ சர்தின்ஹா, ``ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்திவிட்டு இமாச்சலப் பிரதேசம், குஜராத்துக்குச் சென்று பொதுமக்களை விழிப்படையச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன் மூலம், பா.ஜ.க-வை தோற்கடிக்கக்கூடிய ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மேலும், பா.ஜ.க-வுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்தான்" என்று கூறினார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில், காங்கிரஸ் கடந்த 27 ஆண்டுகளில் ஒரு முறைகூட ஆட்சியமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.