Published:Updated:

``கனிமொழி ஆதரவாளர் என்பதால் புறக்கணிக்கப்பட்டேன்" - பா.ஜ.க-வில் இணைந்த திருச்சி சிவா மகன்

பாஜக-வில் இணைந்த திருச்சி சிவா மகன் சூர்யா சிவா ( ட்விட்டர் )

திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பா.ஜ.க-வில் இணைந்தார்.

``கனிமொழி ஆதரவாளர் என்பதால் புறக்கணிக்கப்பட்டேன்" - பா.ஜ.க-வில் இணைந்த திருச்சி சிவா மகன்

திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பா.ஜ.க-வில் இணைந்தார்.

Published:Updated:
பாஜக-வில் இணைந்த திருச்சி சிவா மகன் சூர்யா சிவா ( ட்விட்டர் )

திருச்சி சிவா, நாடாளுமன்ற தி.மு.க மாநிலங்களவைக்குழுத் தலைவராகவும், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருக்கிறார். இவரின் மகன் சூர்யா சிவா தி.மு.க-விலிருந்து விலகி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். மேலும், பா.ஜ.க உறுப்பினர் அட்டையும் பெற்றுக்கொண்டார்.

திருச்சி சிவா - கனிமொழி
திருச்சி சிவா - கனிமொழி

இது தொடர்பாகத் தனியார் செய்தி நாளிதழுக்கு சூர்யா சிவா அளித்த பேட்டியில், "15 ஆண்டுகளாக திமுக-வில் கட்சிப் பணியாற்றியிருக்கிறேன். நான் கனிமொழி ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவந்தேன். மேலும், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்ட என்னையும், என் மனைவி, குழந்தையையும் என் தந்தை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைமைக்குத் தெரியப்படுத்தியும், அவர்மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பா.ஜ.க-வில் இணைந்த சூர்யா சிவா
பா.ஜ.க-வில் இணைந்த சூர்யா சிவா
ட்விட்டர்

தி.மு.க ஆட்சியில் இல்லாதபோது கட்சிக்காகக் கடுமையாக உழைத்த பலர் புறக்கணிக்கப்படுகிறார்கள். புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுகின்றன. இதனால், தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. எனவே, தொலைநோக்குப் பார்வையில் பா.ஜ.க-வில் இணைந்துள்ளேன். பா.ஜ.க-தான் நாட்டை வலுப்படுத்திவருகிறது. தமிழகத்திலும் பா.ஜ.க விரைவில் ஆட்சி அமைக்கும். பதவிக்காக நான் பா.ஜ.க-வுக்குச் செல்லவில்லை" எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism