Published:Updated:

``காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வேன், ஆனால்..!"- அசோக் கெலாட் கூறுவதென்ன?

அசோக் கெலாட்

``ராஜஸ்தானில் என்ன நிலைமை உருவாகிறது, காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு என்ன, ராஜஸ்தான் எம்.எல்.ஏ-க்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்" - அசோக் கெலாட்

``காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வேன், ஆனால்..!"- அசோக் கெலாட் கூறுவதென்ன?

``ராஜஸ்தானில் என்ன நிலைமை உருவாகிறது, காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு என்ன, ராஜஸ்தான் எம்.எல்.ஏ-க்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்" - அசோக் கெலாட்

Published:Updated:
அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் யார் யார் போட்டியிடப்போகிறார்கள் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரின் பெயர்கள் இதில் வட்டமடித்துக்கொண்டேயிருக்கின்றன. மேலும் இந்தப் பேச்சு தொடங்கியதிலிருந்தே, ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க வேண்டுமென்று கூறிவந்த அசோக் கெலாட், ``காங்கிரஸின் தலைவர் பதவிக்கு நான் தேவை என்று கட்சிக்காரர்கள் நினைத்தார்கள் என்றால், நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்" என்று புதனன்று கூறினார். இது கிட்டத்தட்ட தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்பதை உறுதிசெய்யும்விதமாகவே அமைந்தது.

அசோக் கெலாட், ராகுல் காந்தி
அசோக் கெலாட், ராகுல் காந்தி

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதாக, அசோக் கெலாட் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

இது குறித்து நேற்று பேசிய அசோக் கெலாட், ``நான் வேட்புமனு தாக்கல் செய்வேன். அதன் பிறகு அதற்கான வேலைகள் இருக்கும். பின்னர் தேர்தலும் நடத்தப்படலாம். ஆனால், இவையனைத்தும் எதிர்காலத்தைப் பொறுத்தது. இங்கு குறிப்பாக யாரைப் பற்றியும் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மேலும், ராஜஸ்தானில் என்ன நிலைமை உருவாகிறது, காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு என்ன, ராஜஸ்தான் எம்.எல்.ஏ-க்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்" என்று கூறினார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

காங்கிரஸில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24 முதல் 30 வரை நடைபெறவிருக்கிறது. மேலும் வேட்புமனு மீதான பரிசீலனையும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதும் அக்டோபர் 1, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என்றும், 19-ம் தேதி வாக்கு எண்ணப்படும் என்றும் காங்கிரஸ் தலைமை தெரிவித்திருக்கிறது.