Published:Updated:

``என் வாழ்நாளின் கடைசிக் காலத்தை அஸ்ஸாமுக்காகச் செலவிடப்போகிறேன்!" - ரத்தன் டாடா உருக்கம்

பிரதமர் மோடி - ரத்தன் டாடா ( ட்விட்டர் )

``என் கடைசி வாழ்நாள்களில் அஸ்ஸாமை அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்குச் செலவிட விரும்புகிறேன்’’ என, தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

``என் வாழ்நாளின் கடைசிக் காலத்தை அஸ்ஸாமுக்காகச் செலவிடப்போகிறேன்!" - ரத்தன் டாடா உருக்கம்

``என் கடைசி வாழ்நாள்களில் அஸ்ஸாமை அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்குச் செலவிட விரும்புகிறேன்’’ என, தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

Published:Updated:
பிரதமர் மோடி - ரத்தன் டாடா ( ட்விட்டர் )

அஸ்ஸாம் அரசு மற்றும் டாடா அறக்கட்டளை இணைந்து அஸ்ஸாம் கேன்சர் கேர் ஃபவுண்டேஷன் திட்டத்தைச் செயல்படுத்திவருகின்றன. இதனடிப்படையில், இதுவரை 17 புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், இந்தத் திட்டத்தின்கீழ், புதிதாக 10 மருத்துவமனைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, அதில் ஏழு மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும், மூன்று மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் 2-ம் கட்டமாக அஸ்ஸாமின் துப்ரி, நல்பாரி, கோல்பாரா, நாகோன், சிவசாகர், டின்சுகியா, கோலாகாட் ஆகிய ஏழு இடங்களில் புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கலந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஸ்ஸாம்
அஸ்ஸாம்

மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``ஒருகாலத்தில் ஒரு புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதே கொண்டாடப்படவேண்டிய விஷயமாக இருந்தது. ஆனால், தற்போது அஸ்ஸாமில் ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. இப்போது காலம் மாறிவிட்டது. இன்னும் சில மாதங்களில் மூன்று புற்றுநோய் மருத்துவமனைகள் திறப்புவிழாவுக்குத் தயாராக இருக்கும் என்று ரத்தன் டாடா கூறியது மகிழ்ச்சி... அவருடைய சேவை தொடர என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

அதைத் தொடர்ந்து ரத்தன் டாடா, ``அஸ்ஸாமை அனைவரும் அங்கீகரிக்கும் மாநிலமாக மாற்ற எனது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளை அர்ப்பணிக்கப்போகிறேன். அஸ்ஸாம் வரலாற்றில் இன்றைய தினம் மிக முக்கிய தினம். புற்றுநோய் செல்வந்தர்களின் நோய் அல்ல. இந்தியாவின் சிறிய மாநிலத்தில்கூட உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வசதிகள் இருக்கின்றன" என்று உருக்கமாகப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``ரத்தன் டாடா மற்றும் இந்திய அரசின் பங்களிப்புக்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

ஹிமந்த பிஷ்வா சர்மா
ஹிமந்த பிஷ்வா சர்மா

அஸ்ஸாம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயனளிக்கும் வகையில் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு ஒரு பெரிய சாதனை. ரத்தன் டாடா அவர்களின் பங்களிப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism