Published:Updated:

`போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி’ - இந்திய விமானப்படை

பிரம்மோஸ் ஏவுகணை ( ட்விட்டர் )

எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை கப்பலில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்திருக்கிறது.

`போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி’ - இந்திய விமானப்படை

எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை கப்பலில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்திருக்கிறது.

Published:Updated:
பிரம்மோஸ் ஏவுகணை ( ட்விட்டர் )

இந்தியா - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பு தான் `பிரம்மோஸ்’ ஏவுகணை. பாதுகாப்பு பணியில் இந்திய விமானப் படையும், கடற்படையும் இணைந்து செயல்படும் வகையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்திருக்கிறது.

இந்த ஏவுகணை விமானப்படைக்கு சொந்தமான எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானம் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை நேற்று வங்காள விரிகுடாவில் நடைபெற்றது. பிரம்மோஸ் ஏவுகணை ஒன்றை எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் இருந்து கடலில் 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தியது. இந்தச் சோதனை வெற்றி பெற்றிருப்பதாக இந்திய விமானப்படை அறிவித்திருக்கிறது.

பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் ஏவுகணை
ட்விட்டர்

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், `` எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானம், மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை கப்பலில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்திருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பில் இந்தியா ஆதிக்கம் செலுத்த இந்த ஏவுகணை சோதனை உதவியிருக்கிறது.'' எனத் தெரிவித்திருக்கின்றனர்.