Published:Updated:

நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்!- தேர்தல் ஆணையச் செயலாளர் உட்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம்செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக இருந்த எஸ். பழனிசாமி, டவுன் பஞ்சாயத்து இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் எல். சுப்பிரமணியன், மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில், மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் மாற்றம் அரசியல் வட்டாரத்திலும் கவனிக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையராக தாமஸ் வைத்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத்துறை இயக்குநராக இருந்த கலையரசி, கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ் இடமாற்ற உத்தரவு
ஐ.ஏ.எஸ் இடமாற்ற உத்தரவு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் ஆட்சியராக கோவிந்த ராவ், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பணிகள் தேர்வாணைய தலைவராக, டி.எஸ். ராஜசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆபரேஷன் உள்ளாட்சி! - தயாராகும் தமிழகக் கட்சிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானம், மக்கள் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளராகவும், வேளாண் துறை சிறப்புச் செயலாளராக இருந்த முனியநாதன், ஆதி திராவிடர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைலைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.