Published:Updated:

மதம் மாறினால் எஸ்.சி சான்றிதழ் செல்லாதா?! - புதிய சர்ச்சையும் சட்டப் பின்னணியும்

இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம்

``பொதுவாக, பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்கள் எந்தப் பிரிவிலிருந்தாலும் இயல்பாகவே மாநில அரசின் பி.சி பட்டியலுக்கும், மத்திய அரசின் ஓ.பி.சி பட்டியலுக்கும் மாறுவார்கள்."- வழக்கறிஞர் வெண்மணி.

மதம் மாறினால் எஸ்.சி சான்றிதழ் செல்லாதா?! - புதிய சர்ச்சையும் சட்டப் பின்னணியும்

``பொதுவாக, பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்கள் எந்தப் பிரிவிலிருந்தாலும் இயல்பாகவே மாநில அரசின் பி.சி பட்டியலுக்கும், மத்திய அரசின் ஓ.பி.சி பட்டியலுக்கும் மாறுவார்கள்."- வழக்கறிஞர் வெண்மணி.

Published:Updated:
இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம்

``ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பிலிருந்து வெளியேறுகின்றனர். மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டால், அது போலியாகும். இவ்வாறு போலிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று சமீபத்தில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹல்தார், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

அருண் ஹல்தார்
அருண் ஹல்தார்

மேலும், ``நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள், அநீதிகள் தொடர்பான புகார்களை விசாரித்துவருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்குத் தமிழகத்திலிருந்து 200 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், 100 வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று, 60 வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்கள் மீதான வன்முறை, தாக்குதல்களில் ராஜஸ்தான் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளன. போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பொறுப்பு வகித்தபோது, அரசு அதிகாரியை சாதிப் பெயரைக் கூறித் திட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என தாட்கோ இயக்குநர் கூறியிருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாட்டுக்குச் செல்ல தனிப்பாதை உள்ளது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே பட்டியலினத்தவர் மதம் மாறினாலும், அவர்களின் வாழ்வாதார நிலையில் மாற்றம் இல்லாதபோது அவர்களுக்கான பிரதிநிதித்துவமும், இட ஒதுக்கீடும் அவசியம் என்று பொதுநல வழக்குக்கான மையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்திருக்கிறது. விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில், மூன்று வார காலத்தில் அரசு தன் நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டுமென்று கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக வழக்கறிஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான வெண்மணி, “பொதுவாக, பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்கள் எந்தப் பிரிவிலிருந்தாலும் இயல்பாகவே மாநில அரசின் பி.சி பட்டியலுக்கும், மத்திய அரசின் ஓ.பி.சி பட்டியலுக்கும் மாறுவார்கள். இதில் பௌத்தம், சீக்கியம் இரு மதங்களைச் சார்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் ஓ.பி.சி பட்டியலுக்குப் போய்விடுவார்கள். மதம் மாறுவது சரியா, தவறா என்கிற விஷயத்தைத் தாண்டி, மதம் மாறினால் இவர்களுக்கு இருக்கும் உரிமைகளைக் கொடுக்கலாமா, வேண்டாமா என்பதுதான் விவாதிக்கவேண்டியிருக்கிறது.

வழக்கறிஞர் வெண்மணி
வழக்கறிஞர் வெண்மணி

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்புகிற, ஏற்றுக்கொள்கிற மதத்தை ஏற்பது தவறில்லை என்கிறது அரசமைப்புச்சட்டம் 25. அப்படி இருக்கும்போது திரும்பத் திரும்ப கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மதம் மாறுவது என்கிற செய்தியை இந்துத்துவ கிளர்ச்சிக்காகத்தான் அதைப் பேசுபவர்கள் பயன்படுத்துகிறார்கள். படித்த சிலர் தங்கள் சுயமரியாதைக்காக மற்ற மதத்தைச் சார்ந்து போகிறார்களே தவிர மதத்தால் ஈர்க்கப்பட்டில்லை. இஸ்லாம் போனால் `பாய்’ என்கிற ஒற்றை வார்த்தையிலும், கிறிஸ்தவர்களாக மாறினால் ஆர்.சி. , சி.எஸ்.ஐ என மட்டுமே அடையாளப்படுவார்கள். ஆனால், இந்து சமயத்தில் மட்டும்தான் ஒருவர் இறந்தால்கூட எந்தச் சுடுகாடு தேடுவது என்கிற நிலை இருக்கிறது.

மதம் மாறுவதைக் காரணம் காட்டி இட ஒதுக்கீட்டை மறுப்பது ஆபத்தானது. சுயமரியாதையை நோக்கிச் செல்பவர்களின் அனைத்து உரிமையையும் முடக்கி, அப்படி ஓர் எண்ணம் பட்டியல் மற்றும் பழங்குடிச் சமூகங்களுக்கு வரக் கூடாது என்பதன் அடிப்படையில்தான் இது போன்ற விவாதங்களையே உருவாக்குகிறார்கள். வட இந்தியாவில் மிகப் பெரிய ஓட்டு வங்கி வைத்திருப்பதால், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நேரடியாக இன்றைய மத்திய அரசு பேச முடியாது. எனவே, பட்டியலின மக்களுக்குள்ளேயே உள் கலவரம் ஏற்படுத்தி, அவர்கள் மதம் மாறாமல் இருப்பதற்காகத் தொடர்ந்து சில செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்துவருகிறது. எப்படிச் சிறுபான்மை மக்களைப் பயன்படுத்துவதற்கு, மிரட்டுவதற்கு சில விஷயங்களைச் சட்டங்கள் மூலம் முன்னெடுக்கிறார்களோ, அதேபோல் பட்டியலின மக்களை மிரட்டுவதற்கான ஒரு விஷயம்தான் இது” என்றார்.