Published:Updated:

``இனி பெண்களை அடிக்க ஓங்கும் ஆணின் கை உடைக்கப்படும்!" - எம்.பி சுப்ரியா சுலே காட்டம்

எம்.பி சுப்ரியா சுலே

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில், பா.ஜ.க-வினரால் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேர் மீது போலீஸ் வழக்கு பதிவுசெய்துள்ளது.

``இனி பெண்களை அடிக்க ஓங்கும் ஆணின் கை உடைக்கப்படும்!" - எம்.பி சுப்ரியா சுலே காட்டம்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில், பா.ஜ.க-வினரால் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேர் மீது போலீஸ் வழக்கு பதிவுசெய்துள்ளது.

Published:Updated:
எம்.பி சுப்ரியா சுலே

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, கடந்த திங்கள் கிழமையன்று புனேவில் ஒரு புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டபோது, தேசியவாத காங்கிரஸைச் (என்.சி.பி) சேர்ந்த தொழிலாளர்கள், காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்த குறிப்பாணையை அவரிடம் அளிக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென பா.ஜ.க-வினருக்கும், என்.சி.பி தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் என்.சி.பி-யைச் சேர்ந்த பெண் தொழிலாளி பா.ஜ.க-வினர் மீது குற்றம் சாட்டியதையடுத்து, பெண்ணைத் தாக்குதல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேர் மீது போலீஸ் வழக்கு பதிவுசெய்தது.

பாஜக
பாஜக

இந்த நிலையில், பெண் மீதான பா.ஜ.க தொண்டர்களின் இத்தகைய செயலை என்.சி.பி-யைச் சேர்ந்த எம்.பி சுப்ரியா சுலே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து சுப்ரியா சுலே நேற்று பேசுகையில், ``ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தாக்குவதுதான் மராத்திய கலாசாரத்துடன் ஒத்துப்போகிறதா... இது ஷாஹு மகாராஜ், பாபாசாகேப் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி போன்றோரின் மகாராஷ்டிரா. இப்போது நான் சொல்கிறேன், இனிமேல் மாநிலத்தில் ஒரு பெண்ணை அடிக்க யாரேனும் கை ஓங்கினால், நானே சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் அடிக்க முயன்றவரின் கையை உடைத்து அவரிடமே கொடுத்துவிடுவேன்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism