Published:Updated:

``விரைவில் மோடி படத்துடன் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிடப்படலாம்!" - கே.டி.ராமாராவ் தாக்கு

கே.டி.ராமாராவ் ( ட்விட்டர் )

``நிதியமைச்சர் நிர்மலா ஜி-க்கு விருப்பமிருந்தால், மகாத்மா காந்திஜியின் படத்துக்கு பதிலாக, மோடிஜி-யின் படத்தை வைத்து புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுமாறுகூட ரிசர்வ் வங்கிக்கு விரைவில் உத்தரவிடலாம்." - கே.டி.ராமாராவ்

``விரைவில் மோடி படத்துடன் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிடப்படலாம்!" - கே.டி.ராமாராவ் தாக்கு

``நிதியமைச்சர் நிர்மலா ஜி-க்கு விருப்பமிருந்தால், மகாத்மா காந்திஜியின் படத்துக்கு பதிலாக, மோடிஜி-யின் படத்தை வைத்து புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுமாறுகூட ரிசர்வ் வங்கிக்கு விரைவில் உத்தரவிடலாம்." - கே.டி.ராமாராவ்

Published:Updated:
கே.டி.ராமாராவ் ( ட்விட்டர் )

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகத் தீவிர அரசியல் எதிர்ப்புகளை முன்னிறுத்திவரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், 2024-ம் ஆண்டு லோக் சபா தேர்தலை முன்னிட்டு இப்போதே எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துவருகிறார். அண்மையில்கூட பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நேரில் சந்தித்தார். அதோடு, 2024-ல் ஆட்சியமைத்தால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்திருந்தார்.

ரேஷன் கடையில் நிர்மலா சீதாராமன்
ரேஷன் கடையில் நிர்மலா சீதாராமன்

இது ஒருபுறம் நடந்துகொண்டேயிருக்க, தெலங்கானாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷன் கடை ஒன்றில் மோடியின் படம் இல்லாததைப் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்ப, உடனே சந்திரசேகர ராவ் அரசு சிலிண்டர்களில் மோடியின் படத்தை ஒட்டி விமர்சித்திருந்தது. இந்த நிலையில், அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரியின் பெயரை மோடியின் பெயரில் மாற்றியதையடுத்து, தெலங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ், நிர்மலா சீதாராமனை விமர்சித்திருக்கிறார்.

கே.டி.ராமாராவ்
கே.டி.ராமாராவ்
ட்விட்டர்

இது குறித்து கே.டி.ராமாராவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``அகமதாபாத்திலுள்ள எல்.ஜி மருத்துவக் கல்லூரி தற்போது `நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, `சர்தார் படேல் மைதானம்’ என்றிருந்ததையும் `நரேந்திர மோடி மைதானம்’ எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

மோடி
மோடி

எனவே, நிதியமைச்சர் நிர்மலா ஜி-க்கு விருப்பமிருந்தால், மகாத்மா காந்திஜியின் படத்துக்கு பதிலாக, மோடிஜியின் படத்தை வைத்து புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுமாறுகூட ரிசர்வ் வங்கிக்கு விரைவில் உத்தரவிடலாம்" என்று பதிவிட்டிருக்கிறார்.