Published:Updated:

``கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை அனுமதிக்க மாட்டேன்" - யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா

``அரசியலமைப்பின் பாதுகாவலன் என்ற முறையில், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஒளியை மங்கவிட மாட்டேன்." - யஷ்வந்த் சின்ஹா

``கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை அனுமதிக்க மாட்டேன்" - யஷ்வந்த் சின்ஹா

``அரசியலமைப்பின் பாதுகாவலன் என்ற முறையில், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஒளியை மங்கவிட மாட்டேன்." - யஷ்வந்த் சின்ஹா

Published:Updated:
யஷ்வந்த் சின்ஹா

ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-வும் களமிறங்கியுள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் முன்னிலையில் திரௌபதி முர்மு டெல்லியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, வரும் திங்களன்று யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார். தேர்தலின் பரபரப்பான சூழலில், இரு தரப்பினரும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் மும்முரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா, தன்னைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.

திரௌபதி முர்மு, யஸ்வந்த் சின்ஹா
திரௌபதி முர்மு, யஸ்வந்த் சின்ஹா

அந்தக் கடிதத்தில், ``குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு என்னை உங்களின் பொது வேட்பாளராக, ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும் நன்றி. குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் அதன் லட்சியங்களை எந்தவித பயமோ, தயவோ இன்றி மனசாட்சியுடன் நிலைநிறுத்துவேன் என்று உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன்.

குறிப்பாக, அரசியலமைப்பின் பாதுகாவலன் என்ற முறையில், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஒளியை நிர்வாகத்தால் மங்க விட மாட்டேன். மாநில அரசுகளின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களைப் பறிக்க முயலும் அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை நான் அனுமதிக்க மாட்டேன். இந்தியா தற்போது மிகவும் கடினமான காலங்களில் சென்றுகொண்டிருக்கிறது. மேலும், சாமானிய மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையற்ற இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினருக்காக நான் குரலெழுப்புவேன்" என்று யஷ்வந்த் சின்ஹா கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!