Published:Updated:

``இம்ரானுக்கு இந்தியாவைப் பிடித்திருந்தால் இந்தியாவுக்கே செல்லட்டும்!"- மர்யம் நவாஸ் ஷெரீஃப்

மர்யம் நவாஸ் ஷெரீஃப் ( twitter )

இம்ரான் கானின் இந்தியா குறித்த பேச்சுக்கு அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய மரியம் நவாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

``இம்ரானுக்கு இந்தியாவைப் பிடித்திருந்தால் இந்தியாவுக்கே செல்லட்டும்!"- மர்யம் நவாஸ் ஷெரீஃப்

இம்ரான் கானின் இந்தியா குறித்த பேச்சுக்கு அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய மரியம் நவாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

Published:Updated:
மர்யம் நவாஸ் ஷெரீஃப் ( twitter )

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இரவு இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, பாகிஸ்தானில் நிகழும் அரசியல் சூழலுக்கு அமெரிக்காவே காரணம் என்றும் இந்தியாவினுடைய வெளியுறவுக் கொள்கையில் தலையிட எந்த ஒரு வெளிநாட்டுச் சக்திக்கும் தைரியம் இல்லை என்றும் இந்தியா ஒரு பெருமைமிக்க நாடு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது என்றும் புகழ்ந்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், இம்ரான் கானின் இந்தியா குறித்த பேச்சுக்கு அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய மரியம் நவாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

 பாகிஸ்தான் பிரதமர் - இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் - இம்ரான் கான்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "அதிகாரம் கையை விட்டுப் போகிறது என்பதால் மதிமறந்து பேசும் அவரிடம் கூறுங்கள், அவரை துரத்தியது அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களே! அவருக்கு இந்தியாவைப் பிடித்திருந்தால் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லட்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக, "இந்தியாவின் பிரதமர்களுக்கு எதிராக 27 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசியலமைப்பு, ஜனநாயகத்துடன் விளையாடவில்லை என்பதை இந்தியாவைப் புகழ்ந்து பேசும் இம்ரான் கான் அறிந்துகொள்ளவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாஜ்பாய்
வாஜ்பாய்

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார். ஆனால் இம்ரான்கான் போல அரசியல் அமைப்பையோ அல்லது அவரின் நாட்டையோ பிணைக்கைதியாக வைக்கவில்லை" என அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism