Published:Updated:

உக்ரைன் விவகாரம்: `அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொடுப்பதால் எந்த தீர்வும் எட்ட முடியாது' - ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஆபரேஷன் கங்கா மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொடுப்பதன் மூலம் எந்த தீர்வையும் எட்ட முடியாது" என்று கூறினார்.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதல் காரணமாக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அதேபோல, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தங்கள் மக்களையும், மாணவர்களையும் சிறப்பு நடவடிக்கைகள் மூலமாக மீட்டன.

இந்திய அரசு `ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்களை உக்ரைனிலிருந்து மீட்டது. இதுகுறித்து மத்தியப் பாதுகாப்பு அமைச்சகமும், ``பிப்ரவரி 1 முதல் சுமார் 22,500 இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்" என்று கூறியிருந்தது. இதற்கிடையில், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில், பேச்சுவார்த்தை ஒன்றே போர் முடிவுக்கு தீர்வாக அமையும் என்று கூறி ஐ.நா சபையின் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்துவருகிறது.

ஆபரேஷன் கங்கா
ஆபரேஷன் கங்கா

இந்த நிலையில், ஆபரேஷன் கங்கா மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்தார்.

அப்போது பேசிய ஜெய்சங்கர், ``ஆபரேஷன் கங்கா, இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் சவாலான திட்டம். இந்தியாவின் இத்தகைய செயல்பாடு மற்ற நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும். இந்தியாவிலிருந்து நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு இந்த அளவிலான ஒத்துழைப்பு கிடைத்திருக்காது. இந்த வெளியேற்ற நடவடிக்கையில் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி கவனம் செலுத்தியிருக்கிறார்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

தொடர்ந்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஜெய்சங்கர் பேசியபோது, ``இந்தியா ஒரு பக்கத்தை தேர்ந்தெடுத்தால் அது அமைதியின் பக்கமாக இருக்கும். அதுவே வன்முறைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கும். எங்களின் இத்தகைய கொள்கை நிலைப்பாடே, ஐ.நா உட்பட சர்வதேச மன்றங்கள் மற்றும் விவாதங்களில் எங்களின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து வழிநடத்தியது. இந்த விவகாரத்தில் இந்தியா, தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கிறது. ரத்தம் சிந்துவதன் மூலமும், அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொடுப்பதன் மூலமும் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது" என விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism