Published:Updated:

''கூட்டணி என்றாலே மகிழ்ச்சியும் நெருடலும் இருக்கத்தான் செய்யும்!'' - ஒப்புக்கொள்கிறார் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

''55 ஆண்டுகாலமாக நான் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன். எனவே, இப்போது நான் சந்தித்துவருகிற பிரச்னை, மகிழ்ச்சி என்பது புதிதல்ல... கடந்த 55 வருடங்களாகவே நான் சந்தித்து வருபவைதான்'' என்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி.

''கூட்டணி என்றாலே மகிழ்ச்சியும் நெருடலும் இருக்கத்தான் செய்யும்!'' - ஒப்புக்கொள்கிறார் கே.எஸ்.அழகிரி

''55 ஆண்டுகாலமாக நான் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன். எனவே, இப்போது நான் சந்தித்துவருகிற பிரச்னை, மகிழ்ச்சி என்பது புதிதல்ல... கடந்த 55 வருடங்களாகவே நான் சந்தித்து வருபவைதான்'' என்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

'கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க குறைந்த இடங்கள் மட்டுமே ஒதுக்குவது வேதனை அளிக்கிறது. வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெற முயற்சி மேற்கொள்ளப்படும்' என்று சில மாதங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி!

தேர்தல் களம் பரபரப்பாகிவரும் இந்த நேரத்தில், கூட்டணி, பங்கீடுகள் குறித்து அவரிடம் பேசினேன்....

``தி.மு.க கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டில், காங்கிரஸ் கட்சிக்கு கடந்தகால தேர்தல்களிலிருந்தே வருத்தம் தொடர்கிறதே?''

கே.எஸ்.அழகிரி - துரைமுருகன்
கே.எஸ்.அழகிரி - துரைமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட தலைவர் உள்ளிட்டவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அவர்களுக்குத் தேவையான இடங்களை கூட்டணிக் கட்சியினரோடு பேசி பங்கிட்டுக் கொள்வதாகத்தான் இப்போதைய பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

என்னுடைய 55 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையிலிருந்து சொல்கிறேன்... கூட்டணிப் பேச்சுவார்த்தை என்றாலே அதில், மகிழ்ச்சியும் நெருடலும் இருக்கத்தான் செய்யும்! 'இரவு - பகல், மகிழ்ச்சி - வருத்தம்' என இரு துருவங்கள் இருப்பதுபோல், பேச்சுவார்த்தையின்போதும் கேட்பவர் -கொடுப்பவர் என அவரவருக்கென்று தனித்துவம் இருக்கும்போது, அதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். எனவே, ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து எப்படித் தண்ணீராக இருக்கிறதோ, அதேபோன்று இணைந்த விஷயமாகவே இருக்கின்ற இதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''மாநிலத் தலைவராக கடந்த 3 ஆண்டுகளில், நீங்கள் செய்துள்ள சாதனை என்ன?''

''55 ஆண்டுகாலமாக நான் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன். எனவே, இப்போது நான் சந்தித்துவருகிற பிரச்னை, மகிழ்ச்சி என்பது புதிதல்ல... கடந்த 55 வருடங்களாகவே நான் சந்தித்து வருபவைதான். ஆக, இந்த அனுபவங்கள்தான், ஒவ்வொரு சூழலையும் திறம்பட எதிர்கொள்வதற்கும் பயன்பட்டு வருகிறது.''

சத்திய மூர்த்தி பவன்
சத்திய மூர்த்தி பவன்

''காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான இடங்களைக் கேட்டுப் பெறுவதில், மாநிலத் தலைமை அக்கறை கொள்ளவில்லை என்றப் புகார் எழுந்துள்ளதே...?''

''அப்படியெல்லாம் இல்லை.... இடப் பங்கீடு குறித்தப் பேச்சுவார்த்தைக்கு யாரைத் தலைவராக நியமித்திருக்கிறோமோ அவர்கள் மாவட்ட தி.மு.க செயலாளரோடு பேசி, சரிசெய்துகொள்கிறார்கள்தான். ஆங்காங்கே சின்னச்சின்ன பிரச்னைகள் இருந்ததே தவிர... மற்றபடி எல்லா மாவட்டங்களிலும்கூட சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்துமுடிந்திருக்கிறது.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''பதவிக் காலத்தை நிறைவுசெய்துவிட்டதால், 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு குறித்து, மாநிலத் தலைமை அக்கறைகொள்ளவில்லை' என்று காங்கிரஸ் கட்சியினரே குறைபட்டுக்கொள்கின்றனரே?''

''இதுபோன்று கற்பனையாக சிந்தித்துக் கேள்வி கேட்டால், நாங்கள் என்ன பதில் சொல்வது?

பொறுப்பில் இருக்கிறவரையில், நமது கடமையைச் செய்துமுடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய செயல்திட்டமே.... அந்தவகையில், மாநிலத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து தற்போதைய நிமிடம் வரை என்னுடைய கடமையைச் சரிவர செய்துவருகிறேன். ஆனாலும்கூட, ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊடகத்தினர்தான் இதுபோன்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுவருகிறீர்கள். அதேசமயம் உங்கள் கேள்விக்கான பதிலாக, ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றே வருகிறோம்.''

திமுக வினரிடம் வாக்குவாதம் செய்யும் ஜோதிமணி
திமுக வினரிடம் வாக்குவாதம் செய்யும் ஜோதிமணி

''கரூர் மாவட்டத்தில் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுமாறு ஜோதிமணியை தி.மு.க-வினர் கூறியதாக சர்ச்சை எழுந்ததே...?''

''கரூர் மாவட்டத்தில் இட பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது, எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கும் தி.மு.க-வினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். நாங்களும்கூட உடனடியாக இந்த விவகாரம் குறித்து ஜோதிமணியிடம் விவரங்களைக் கேட்டறிந்தோம். ஆனால், அதன்பிறகு இரு தரப்பினருமே சுமூகமாகப் பேசி பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட்டோம். தி.மு.க - காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே இப்போது அங்கே ஒற்றுமையாக தேர்தல் பரப்புரைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.''

'' 'அராஜக அரசியல் செய்கிறார் ஜோதிமணி' என்ற விமர்சனம் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே தொடர்ச்சியாக எழுகின்றனவே...?''

''கருத்து என்று இருந்தாலே ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வரத்தான் செய்யும். அந்தவகையில், கருத்து ஒற்றுமை, கருத்து வேறுபாடு என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கும் பதில்.... நீங்கள் கேட்கிற இந்தக் கேள்விக்கும் பொருந்தும்.''

வெளியேறிய ஜோதிமணி
வெளியேறிய ஜோதிமணி

''மாநிலத் தலைவராக நீங்கள் ஆற்றிய பணிகள் திருப்தியளிக்கின்றனவா?''

''நிச்சயமாக... கட்சித் தோழர்கள், தலைவர்களில் ஆரம்பித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரையிலாக எல்லோருடனும் நெருக்கமாக - சுமூகமாகப் பழகிவருகிறேன். இயன்றவரையில் முரண்பாடு இல்லாமல் இருக்கிறேன். நாளை இந்தத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாலும்கூட, இவர்களோடு மகிழ்ச்சியான உறவில் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.''

''மீண்டும் தலைவர் பதவியில் தொடர விரும்புகிறீர்களா?''

''கட்சி எனக்கு எந்தக் கடமையைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியோடு செய்துமுடிப்பதுதான் என் கடமை. சத்திய மூர்த்தி பவனின் கடைநிலை ஊழியராக, கட்சி என்னை நியமித்தாலும்கூட அந்தப் பணிக்கான கடமையாக எல்லோருக்கும் டீ வாங்கித் தருவேன். மாறாக உச்சப் பதவியை அளித்தாலும் திறம்பட செயலாற்றுவேன். ஆக, காங்கிரஸ் கட்சிக்குப் பணி செய்துகிடப்பதே என் கடன்!''

ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

''அண்மையில், 'முதல்வர், கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் அதிகம் பேசுவதில்லை' என்று பொதுவெளியிலேயே வருத்தப்பட்டிருந்தீர்களே?''

''அது வருத்தம் இல்லை.... கலகலப்பாக சொன்னதுதான். 'முதல்வர், தன் பேச்சைக் குறைத்து செயல்திறனை அதிகப்படுத்தியிருக்கிறார்' என்றுதான் நானும் சொல்லவந்தேன். ஆனால், முதல் பாதி பேச்சுக்கு மட்டுமே ஊடகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவிட்டது.''

''இல்லையில்லை.... இப்படியெல்லாம் மலிவான அரசியல் செய்வதில் எனக்கு ஒருபோதும் விருப்பம் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினோடு எனக்கு நீண்டகாலப் பழக்கம் உண்டு. 1996-லேயே சட்டமன்றத்தில் அவரோடு நானும் எம்.எல்.ஏ-வாக ஒன்றாகப் பணி செய்திருக்கிறேன். எனவே, எங்கள் கட்சிக்கு இடங்கள் தேவையென்றால், அவரிடம் நானே நேரில் கேட்டுவிடப் போகிறேன். கல்யாண வீட்டில் போய்த்தான் கேட்க வேண்டுமா என்ன? சட்டமன்றத்திலேயே இதுபோன்று எல்லோரும் ஜோவியலாகப் பேசிக்கொள்வதெல்லாம் வழக்கமானதுதான். எனவே, அன்றைய என் பேச்சுக்கு எந்த உள்நோக்கமும் கற்பிக்கவேண்டாம்!

ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி

முதல்வராக கடந்த எட்டு மாதங்களில் அவரிடம் உள்ள சகிப்புத்தன்மையைப் பற்றித் தெளிவாக அறிந்துகொண்டேன். பொதுவாக அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர் கருத்துகளை காது கொடுத்துக் கேட்பதில்லை. ஆனால், நம் முதல்வர் எல்லோருடைய கருத்துகளுக்கும் காதுகொடுக்கிறார்... ஏற்றுக்கொள்கிறார்; இயன்றவரையில் செய்துதருகிறார். கட்சியையும் அதிகாரத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார்.

அவரின் ஆட்சியின்கீழ், அதிகாரிகள் கடமை உணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். உதாரணமாக... கடந்த மழைப் பெருவெள்ளத்தின்போது அதிகாரிகள் மிகக்கடுமையாக வேலை செய்தார்கள். அடுத்து டெல்டா பகுதியில் பாசன வாய்க்கால்களைத் தூர்வாரும் பணியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து, சிறப்பாக செய்து முடித்தனர். இப்படி முதல்வர் கவனத்துக்குச் செல்கிற எல்லா விஷயங்களிலும் அக்கறையும் ஆர்வமுமாக முழுமையாக செய்துமுடிக்கிறார்.''

விறுவிறுப்பான இந்தப் பேட்டியின் தொடர்ச்சியை விகடன் இணையதளத்தில் 06-02-2022 அன்று படியுங்கள்...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism