Published:Updated:

"உத்தவ் தாக்கரேவை விட்டு எம்.எல்.ஏ-க்களே செல்லும்போது தொழிற்சாலைகள் ஏன் செல்லாது?" - பாஜக விமர்சனம்

சந்திரசேகர் பவன்குலே ( ட்விட்டர் )

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயைவிட்டு சொந்த எம்.எல்.ஏ-க்களே செல்லும்போது தொழிற்சாலைகள் ஏன் செல்லாது என்று மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்திருக்கிறார்.

"உத்தவ் தாக்கரேவை விட்டு எம்.எல்.ஏ-க்களே செல்லும்போது தொழிற்சாலைகள் ஏன் செல்லாது?" - பாஜக விமர்சனம்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயைவிட்டு சொந்த எம்.எல்.ஏ-க்களே செல்லும்போது தொழிற்சாலைகள் ஏன் செல்லாது என்று மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சந்திரசேகர் பவன்குலே ( ட்விட்டர் )

மகாராஷ்டிராவுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள், சமீபகாலமாக வெளி மாநிலத்துக்குச் சென்றவண்ணம் இருக்கின்றன. இதனால் மாநில அரசு கடுமையான விமர்சனத்துக்கு ஆளாக வருகிறது. ஆனால், தொழிற்சாலைகள் வெளிமாநிலத்துக்குச் செல்வதற்கு முந்தைய உத்தவ் தாக்கரே அரசுதான் காரணம் என்று பா.ஜ.க கூறிவருகிறது. மகாராஷ்டிராவில் தொழிற்சாலைகள் வெளிமாநிலத்துக்குச் செல்வது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மகாராஷ்டிராவுக்குப் பொருளாதார தடை விதிக்கப்பட்டு இருப்பது போன்ற ஒரு நிலை நிலவுகிறது. தொழிற்சாலைகள் வருவதில் மகாராஷ்டிரா தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மின் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நாக்பூரில் அமைக்க முந்தைய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்தத் தொழிற்சாலை இப்போது பா.ஜ.க ஆட்சிசெய்யும் மத்தியப் பிரதேசத்துக்குச் சென்றுவிட்டது’' என்றார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் மாநில அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்கு பதிலளித்து மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே சாங்கிலியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``உத்தவ் தாக்கரேயைவிட்டு அவருடைய சொந்த எம்.எல்.ஏ-க்களே வெளியில் செல்லும்போது தொழிற்சாலைகள் ஏன் செல்லாது. ஆனால் இதற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும்தான் காரணம் என்று சொல்கிறார்கள்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது மகாராஷ்டிராவுக்கு தொழிற்திட்டங்கள் வருகின்றனவா, போகின்றனவா என்று கவலைப்பட்டதில்லை. பெரிய தொழிற்திட்டங்கள் மகாராஷ்டிராவுக்கு வரவேண்டுமானால் முதல்வர் அனைவரும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் உத்தவ் தாக்கரே 18 மாதங்களாக தலைமைச் செயலகத்துக்கே வரவில்லை. அதிகாரிகள் முதல்வரைச் சந்தித்துப் பேசக் காத்திருந்தனர்'' என்று தெரிவித்தார்.

அண்மையில் பவன்குலேதான்`` சரத் பவார் வைத்த பில்லி சூனியத்தில் உத்தவ் தாக்கரே சிக்கிக்கொண்டிருக்கிறார்'' எனத் தெரிவித்திருந்தார். ஆரம்பத்தில் உத்தவ் தாக்கரேயை விமர்சிக்காமல் இருந்த ஏக்நாத் ஷிண்டே அணியினரும் இப்போது கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.