Published:Updated:

`அடுத்து இதைப்பற்றிதான் எங்கள் பேச்சுவார்த்தை'- ராஜ்நாத் சிங் பதிலடி!

மலையரசு

இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களையும், தீவிரவாதிகளையும் அழித்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொள்கிறது.

rajnath singh
rajnath singh

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாக அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகளின் ஆதரவையும் பாகிஸ்தான் கோரியது.

jammu and kashmir
jammu and kashmir

இதற்கிடையே, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட விரும்பாத ஐ.நா, அதற்கு மாறாக பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது. இதைவைத்து, இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என பாகிஸ்தான் குரல் எழுப்பிவரும் நிலையில், சமீபத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ``பாலக்கோட் தாக்குதலைவிட மிகப்பெரிய தாக்குதலுக்கு இந்தியா திட்டமிடுகிறது" என்று கூறியிருந்தார்.

`உங்ககிட்ட இருந்தே தொடங்கலாம்...! - பாகிஸ்தான், சீனா முயற்சியை முறியடித்த சையது அக்பருதீன்

இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க பேரணியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது, ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்காகத்தான். நமது பக்கத்து நாடு சர்வதேச நாடுகளின் கதவுகளைத் தட்டி, இந்தியா தவறு செய்துள்ளது என்று கூறுகிறது. ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்கு யாரிடமும் சான்றிதழ் பெறத் தேவையில்லை. தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

`அடுத்து இதைப்பற்றிதான் எங்கள் பேச்சுவார்த்தை'- ராஜ்நாத் சிங் பதிலடி!

அப்படி பேச்சுவார்த்தை நடந்தால்கூட, அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகவே இருக்கும். இதைப் பற்றி விவாதிக்கவே இந்தியா ஆர்வமாக உள்ளது. பாலக்கோட் தாக்குதலைவிட மிகப்பெரிய தாக்குதலுக்கு இந்தியா திட்டமிடுவதாக, இம்ரான்கான் பேசியுள்ளார். இதன்மூலம், பாலக்கோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தி, தீவிரவாத முகாம்களையும் தீவிரவாதிகளையும் அழித்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொள்கிறது" என்று கூறினார்.