Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல்: ``சரத் பவார் இதுவரை தோற்றதே இல்லை, ஆனால்..!" - தேசியவாத காங்கிரஸ்

சரத் பவார்

`தேவையான எண்ணிக்கை இருந்தால் தேர்தலில் போட்டியிடுவது பற்றி சரத் பவார் முடிவெடுப்பார்.' - தேசியவாத காங்கிரஸ்

குடியரசுத் தலைவர் தேர்தல்: ``சரத் பவார் இதுவரை தோற்றதே இல்லை, ஆனால்..!" - தேசியவாத காங்கிரஸ்

`தேவையான எண்ணிக்கை இருந்தால் தேர்தலில் போட்டியிடுவது பற்றி சரத் பவார் முடிவெடுப்பார்.' - தேசியவாத காங்கிரஸ்

Published:Updated:
சரத் பவார்

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தேர்தலில் தங்கள் சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து விவாதித்து வருகின்றன. இதில் முக்கியமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்க 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். நாளை டெல்லியில் நடைபெறவிருக்கும் அந்தக் கூட்டத்தில், காங்கிரஸும் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவாரை, மம்தா பானர்ஜி டெல்லியில் இன்று நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இவரின் இந்த சந்திப்பு தொடர்பாக தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் ஷகன் புஜ்பால், ``தேவையான எண்ணிக்கை இருந்தால் தேர்தலில் போட்டியிடுவது பற்றி சரத் பவார் முடிவெடுப்பார்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சரத் பவார், மம்தா பானர்ஜி
சரத் பவார், மம்தா பானர்ஜி

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஷகன் புஜ்பால், ``சரத் பவார் குடியரசுத் தலைவரானால், ஒவ்வொரு மராத்தியரின் நெஞ்சும் பெருமிதம் கொள்ளும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இப்போதைக்கு கேள்வி என்னவென்றால், எங்களிடம் தேவையான எண்ணிக்கை இருக்கிறதா என்பதுதான். அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி ஆகியோர் சரத் பவாரின் பெயரைப் பரிந்துரைத்திருக்கின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவர் தனது வாழ்நாளில் இதுவரை எந்தத் தேர்தலிலும் தோல்வியடைந்ததில்லை. எனவே தேவையான எண்ணிக்கை இருப்பின், எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடி பின்னர் அது குறித்து அவர் முடிவெடுப்பார்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism