Published:Updated:

குஜராத் கலவரம்:`மனசாட்சியிருந்தால் மோடியைக் குற்றம்சாட்டியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’- அமித் ஷா

அமித் ஷா

``அன்று மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் மனசாட்சியோடு இருந்தால், உண்மையில் அவர்கள் மோடியிடமும் பாஜக-விடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்." - அமித் ஷா

குஜராத் கலவரம்:`மனசாட்சியிருந்தால் மோடியைக் குற்றம்சாட்டியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’- அமித் ஷா

``அன்று மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் மனசாட்சியோடு இருந்தால், உண்மையில் அவர்கள் மோடியிடமும் பாஜக-விடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்." - அமித் ஷா

Published:Updated:
அமித் ஷா

2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடிமீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.

2001 முதல் 2014 வரை குஜராத்தின் முதல்வராக மோடி பதவி வகித்துவந்தார். 2002-ம் ஆண்டு அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் நடந்த வன்முறையில் காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு, மோடி உட்பட குற்றம்சாட்டப்பட்ட சிலருக்குத் தொடர்பில்லை என்று தெரிவித்ததை எதிர்த்து, குஜராத் வன்முறையில் சதி நடந்திருப்பதாக எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஜாகியா ஜாஃப்ரி மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏ.என்.ஐ ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இந்தப் பேட்டியில், ``ஜனநாயகத்தில் அரசியலமைப்பு எவ்வாறு மதிக்கப்பட வேண்டும் என்பதற்கு பிரதமர் மோடி, அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஓர் சிறந்த உதாரணத்தை முன்வைத்திருக்கிறார். இதில் மோடியும் விசாரிக்கப்பட்டார். ஆனால் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாடு முழுவதிலுமிருந்து ஆதரவாளர்கள் யாரும் மோடிக்கு ஒற்றுமையாகத் திரளவில்லை. சட்டத்துக்கு நாங்கள் ஒத்துழைத்தோம்.

நானும்கூட கைதுசெய்யப்பட்டேன். ஆனால், நீண்ட போருக்குப் பிறகு இன்று இவ்வளவு பெரிய வெற்றியுடன் உண்மை வெளியே வரும்போது, ​​​​அது தங்கத்தைவிட அதிகமாகப் பிரகாசிக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், இன்று மோடிமீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் மனசாட்சியோடு இருந்தால், உண்மையில் அவர்கள் மோடியிடமும் பாஜக-விடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என அமித் ஷா கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!