Published:Updated:

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.70-க்கு மது வழங்குவோம்!’ - சொல்கிறார் ஆந்திரா பா.ஜ.க தலைவர்

சோமு வீர்ராஜு
News
சோமு வீர்ராஜு

பா.ஜ.க-வுக்கு ஒரு கோடிப் பேர் வாக்களித்தால் 70 ரூபாய்க்கு மது வழங்கத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் சோமு தெரிவித்துள்ள கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஆந்திராவில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமானோர் மது அருந்துவதாகச் சொல்லப்படுகிறது. அவர்களின் வாக்குகளை கவர அம்மாநில பா.ஜ.க புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் சோமு வீர்ராஜு விஜயவாடாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``ஆந்திராவில் ஒரு கோடி மக்கள் அதிக விலையுள்ள மதுவை வாங்கிக் குடிக்கின்றனர். மலிவு விலை மது கிடைக்கவேண்டுமானால் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு கோடி மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால் ரூ.70-க்கு மதுவை விற்பனை செய்வோம்.

மது
மது

வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில் மதுபானத்தின் விலையை ரூ.50-ஆகக் குறைக்கவும் தயாராக இருக்கிறோம். தரம் குறைந்த மதுபானங்களை அதிக விலைக்கு மாநில அரசு விற்பனை செய்கிறது. அனைத்து வகையான போலி பிராண்ட் மதுபானங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், பிரபலமான மதுபான வகைகள் கிடைப்பதில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆந்திராவில் மதுபானத்துக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதமும் ரூ.12 ஆயிரம் செலவு செய்கின்றனர். ஆனால் அந்தப் பணத்தை மாநில அரசு ஏதாவது ஒரு நலத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு மீண்டும் வழங்குகிறது. ஆளும் கட்சித் தலைவர்களுக்கு மதுபானத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அந்தத் தொழிற்சாலையில்களிலிருந்து அரசுக்கு மிகவும் தரமற்ற மது சப்ளை செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

சோமு வீர்ராஜு
சோமு வீர்ராஜு

தற்போது ஆந்திராவில் ஒரு குவார்ட்டர் பாட்டில் மது 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து மது வாங்கிக் குடிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவேதான் பா.ஜ.க மலிவு விலைக்கு மது கொடுப்பதாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளது.