Published:Updated:

நிலக்கரி சுரங்க ஊழல்: ``எதற்குக் கேள்வி... முடிந்தால் என்னை கைதுசெய்யுங்கள்!" - ஜார்க்கண்ட் முதல்வர்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை புறக்கணித்த ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ``முடிந்தால் கைதுசெய்யுங்கள்" எனச் சவால் விட்டிருக்கிறார்.

நிலக்கரி சுரங்க ஊழல்: ``எதற்குக் கேள்வி... முடிந்தால் என்னை கைதுசெய்யுங்கள்!" - ஜார்க்கண்ட் முதல்வர்

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை புறக்கணித்த ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ``முடிந்தால் கைதுசெய்யுங்கள்" எனச் சவால் விட்டிருக்கிறார்.

Published:Updated:
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தன் வசமிருக்கும் நிலக்கரி துறை மூலம், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், தன் பெயரிலேயே சுரங்கங்களை ஒதுக்கிக் கொண்டதாக அவர்மீது பா.ஜ.க குற்றம்சாட்டிவருகிறது. அந்த வரிசையில், அமலாக்கத்துறை நேற்று, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு ஆளுங்கட்சியிலிருந்து பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்தன.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணையைப் புறக்கணித்த ஹேமந்த் சோரன் தன்னுடைய வீட்டின் முன், கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றியபோது, ``நான் குற்றவாளி என்றால், ஏன் என்னைக் கேள்வி கேட்கிறீர்கள். உங்களால் முடிந்தால் வந்து என்னைக் கைதுசெய்யுங்கள்" என்று சவால்விட்டிருக்கிறார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

மேலும் பா.ஜ.க-வைச் சாடிய ஹேமந்த் சோரன், ``ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க பா.ஜ.க, மத்திய அமைப்புகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-க்கு நான் பயப்படவில்லை. பழங்குடியின முதலமைச்சரைத் துன்புறுத்துவதற்கான சதியின் ஒரு பகுதி இது. இந்த சதிக்குத் தகுந்த பதில் கிடைக்கும்" எனக் கூறினார்.