Published:Updated:

அக்னிபத்: ``பிடிக்கவில்லையெனில் வர வேண்டாம்; யார் உங்களை வரச்சொன்னது?" - மத்திய அமைச்சர் வி.கே.சிங்

மத்திய அமைச்சர் வி.கே.சிங் ( Twitter )

``இந்த ஆள்சேர்ப்பு திட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வர வேண்டாம். யார் உங்களை வரச்சொன்னது?" - மத்திய அமைச்சர் வி.கே.சிங்.

அக்னிபத்: ``பிடிக்கவில்லையெனில் வர வேண்டாம்; யார் உங்களை வரச்சொன்னது?" - மத்திய அமைச்சர் வி.கே.சிங்

``இந்த ஆள்சேர்ப்பு திட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வர வேண்டாம். யார் உங்களை வரச்சொன்னது?" - மத்திய அமைச்சர் வி.கே.சிங்.

Published:Updated:
மத்திய அமைச்சர் வி.கே.சிங் ( Twitter )

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பல இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்து பேருந்துகள், ரயில்கள் என பொதுச்சொத்துகள் தீயில் சேதமாகின. தெலங்கானாவில், இந்தக் கலவரத்தின்போது ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சரும், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங், ``இந்த ஆள் சேர்ப்பு திட்டம் பிடிக்கவில்லையென்றால் வர வேண்டாம். உங்களை யார் வரச்சொன்னது" என்று கூறியிருக்கிறார்.

அக்னிபத் போராட்டத்தில் ரயிலுக்கு தீ வைப்பு
அக்னிபத் போராட்டத்தில் ரயிலுக்கு தீ வைப்பு
ட்விட்டர்

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சிங், ``ராணுவத்தில் சேர்வதென்பது தன்னார்வம்தானே தவிர கட்டாயமொன்றுமல்ல. யாரேனும் சேர விரும்பினால், அவர்களின் விருப்பப்படி சேரலாம். நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம். இந்த ஆள் சேர்ப்பு திட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வர வேண்டாம். யார் உங்களை வரச்சொன்னது... பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றை நீங்கள் எரிக்கிறீர்கள். ஆயுதப்படையில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள் என்று யார் கூறியது... அதற்கான தகுதியை நிறைவு செய்தால் மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்" எனக் கூறினார்.

முன்னதாக பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, ``பா.ஜ.க அலுவலகத்துக்கு நான் செக்யூரிட்டியை அமர்த்த விரும்பினால், அக்னி வீரனுக்கு முன்னுரிமை கொடுப்பேன்" என நேற்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism