Published:Updated:

"காசியில் தமிழ் சங்கமம்... பிரதமரை நினைத்து வியக்கிறேன்" - இளையராஜா

இளையராஜா

"கபீர் தோஹாவிலே 8 வார்த்தைகள் மூலம் ஆன்மீகம் பேசினார். தமிழ்நாட்டில் திருவள்ளுவர் 7 வார்த்தையில் உலகிற்கு வாழ்வியலை தந்தார்" - இளையராஜா

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஐஐடி இணைந்து நடத்தும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி காசிக்கும் தமிழுக்கும் உள்ள பழைமையான தொடர்பை உணர்த்தும் வகையில் நடத்தப்படுகிறது எனச் சொல்லப்படுகிறது.

"காசியில் தமிழ் சங்கமம்... பிரதமரை நினைத்து வியக்கிறேன்" - இளையராஜா

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இசையமைப்பாளர் இளையராஜா, "காசிக்கும் தமிழுக்கும் பெரும் தொடர்பு உள்ளது. பாரதியார் காசியில் இரண்டு ஆண்டுகள் தங்கி கல்வி பெற்றார். கபீர் தோஹாவிலே 8 வார்த்தைகள் மூலம் ஆன்மீகம் பேசினார். தமிழ்நாட்டில் திருவள்ளுவர் 7 வார்த்தையில் உலகிற்கு வாழ்வியலை தந்தார். இவ்வளவு சிறப்பு பெற்ற காசியில் தமிழ் சங்கமம் நடத்த வேண்டும் என பிரமருக்கு எப்படி தோன்றியது என்பதைக் கண்டு வியக்கிறேன். அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்றார். மேலும் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.