Published:Updated:

``8 ஆண்டுகளில் என்னைப் பிரதமராக நான் நினைத்ததே இல்லை; 130 கோடி மக்களின் சேவகன் நான்!" - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

``2014-ம் ஆண்டுக்கு முன்னிருந்த ஆட்சியில், குடும்ப அரசியல், ஊழல் பற்றி மட்டுமே மக்கள் பேசுவார்கள். ஆனால் மக்கள் இன்று அரசாங்கத்தின் திட்டங்கள், அவற்றின் பலன்கள் குறித்துப் பேசுகிறார்கள்" - பிரதமர் மோடி

``8 ஆண்டுகளில் என்னைப் பிரதமராக நான் நினைத்ததே இல்லை; 130 கோடி மக்களின் சேவகன் நான்!" - பிரதமர் மோடி

``2014-ம் ஆண்டுக்கு முன்னிருந்த ஆட்சியில், குடும்ப அரசியல், ஊழல் பற்றி மட்டுமே மக்கள் பேசுவார்கள். ஆனால் மக்கள் இன்று அரசாங்கத்தின் திட்டங்கள், அவற்றின் பலன்கள் குறித்துப் பேசுகிறார்கள்" - பிரதமர் மோடி

Published:Updated:
பிரதமர் மோடி

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் எட்டு ஆண்டுக்கால ஆட்சி நிறைவடைந்ததையொட்டி, பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக இமாச்சலப் பிரதேசத்துக்கு பிரதமர் மோடி இன்று வருகை புரிந்தார். இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் நடைபெற்ற விழாவில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் மோடி நேரடியாகவே கலந்துரையாடினார்.

பின்னர் மேடையில் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய மோடி, ``கடந்த எட்டு ஆண்டுகளில், ஒரு முறைகூட என்னைப் பிரதமராக நான் நினைத்ததில்லை. கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டும்தான் எனக்குப் பிரதமர் பொறுப்பு உள்ளது. ஆனால், அந்த கோப்புகள் சென்ற பிறகு நான் பிரதமர் இல்லை.130 கோடி மக்களின் பிரதான சேவகன்தான் நான்.

மோடி
மோடி

அவர்களே என் வாழ்வின் எல்லாமுமாக இருக்கிறார்கள். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்தான் என் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்னிருந்த காங்கிரஸ் ஆட்சியில், குடும்ப அரசியல், ஊழல் பற்றி மட்டுமே மக்கள் பேசுவார்கள். ஆனால் மக்கள் இன்று அரசாங்கத்தின் திட்டங்கள், அவற்றின் பலன்கள் மற்றும் வளர்ச்சி குறித்துப் பேசுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள் உலக அளவில் இன்று பேசப்படுகின்றன. உலக வங்கிகூட இந்தியாவின் எளிதாகத் தொழில் தொடங்கும் கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறது" எனக் கூறினார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 11-வது தவணையை விவசாயிகளுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism