Published:Updated:

``என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி!'' - டெல்லி பேரணியில் சீறிய ராகுல்

ராகுல் காந்தி

நாட்டைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

``என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி!'' - டெல்லி பேரணியில் சீறிய ராகுல்

நாட்டைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Published:Updated:
ராகுல் காந்தி

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா, காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றைக் கண்டித்து `இந்தியாவைக் காப்பாற்றுங்கள்' என்ற பெயரில் பிரமாண்ட பேரணியைக் காங்கிரஸ் கட்சி இன்று (14.12.2019) நடத்தியது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ``நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி-க்கள் நேற்று என்னை மன்னிப்பு கேட்கும்படிச் சொன்னார்கள். அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். உண்மையைப் பேசியதற்காக நான் எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

ராம்லீலா மைதானம்
ராம்லீலா மைதானம்

பொருளாதாரம்தான் ஒரு நாட்டின் பலமே. நாம் 9 சதவிகிதம் ஜிடிபியை எட்டியபோது மற்ற நாடுகள் எல்லாம் வியப்புடன் பார்த்தனர். `அவர்களால் எப்படி முடிந்தது?' என எண்ணினர். ஆனால், இப்போது வெங்காயம் ரூ.200-க்கு விற்கப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தை மோடி ஒற்றை ஆளாக அழித்துவிட்டார். உங்களுக்கு நினைவிருக்கிறதா... 2016-ம் ஆண்டு இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி முன்பு தோன்றினார். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தைக் கடினமாகத் தாக்கினார். அதை மீட்கும் பணியை, அவர் இன்று வரை செய்யவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொழிலதிபர்களின் ரூ. 1.45 லட்சம் கோடி கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது. `இந்தியப் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும்' என நம்முடைய எதிரிகள் நினைக்கிறார்கள் அந்தப் பணியை மோடி செய்கிறார். நம்முடைய பொருளாதாரத்தை எதிரிகளால் அழிக்க முடியாது. ஆனால், நம்முடைய பிரதமரால் அது முடியும். ஜம்மு - காஷ்மீர், அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களை நேரில் சென்று பாருங்கள். மாநிலமே பற்றி எரிகிறது. அரசாங்கம் பிரிவினையை ஏற்படுத்தி தேசத்தை பலவீனமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதிகாரத்துக்காக மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார்.

போராட்டம்
போராட்டம்

நாட்டை வலுப்படுத்துவார் என நீங்கள் மோடியைத் தேர்வு செய்தீர்கள். ஆனால், அவர் அந்தப் பணியை செய்யவில்லை. நம்முடைய ஜிடிபி தற்போது 4 சதவிகிதம்தான். `எத்தனை விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்' என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அதற்கு, `எங்களுக்குத் தெரியாது' என அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான், நாட்டை பிளவுபடுத்த வேண்டும். நாட்டைக் காப்பாற்றுவதற்கு, காங்கிரஸ் தொண்டர்கள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism