Published:Updated:

`ஈவிகேஎஸ் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார்; உடல்நிலையில் முன்னேற்றம்' - மருத்துவமனை நிர்வாகம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:

`ஈவிகேஎஸ் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார்; உடல்நிலையில் முன்னேற்றம்' - மருத்துவமனை நிர்வாகம்

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் திருமகன் ஈ.வெ.ரா. இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

சிகிச்சையில் ஈ.வி.கே.எஸ்
சிகிச்சையில் ஈ.வி.கே.எஸ்

அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். பின்னர் கடந்த பிப்.10-ம் தேதி எம்.எல்.ஏ-வாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவியேற்றுக்கொண்டார். இதற்கிடையில், இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து போரூரில் இருக்கும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. இதற்கிடையில், அவரின் உடல்நிலையை மையமாகவைத்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனை அறிக்கை

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 15-ம் தேதி இதய பாதிப்பு, கொரோனா தொற்று ஆகியவற்றுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இதய பாதிப்பிலிருந்து குணமடைந்துவருகிறார்" என்று தெரிவித்திருக்கிறது.