Published:Updated:

நள்ளிரவு வரை நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு... இறுதியில் கவிழ்ந்தது இம்ரான் கான் அரசு!

இம்ரான் கான்

பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வி அடைந்ததால், அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நள்ளிரவு வரை நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு... இறுதியில் கவிழ்ந்தது இம்ரான் கான் அரசு!

பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வி அடைந்ததால், அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டத்தில், இம்ரான் கான் அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் செல்லாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் குவாசிம் சூரி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் இம்ரான் கான், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும், 90 நாள்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிபரிடம் கோரிக்கை வைத்ததன் பேரில், அதிபரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம்
பாகிஸ்தான் நாடாளுமன்றம்

இதனை ஏற்க மறுத்த நாடாளுமன்ற எதிர்க்கட்சியினர், துணை சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் துணை சபாநாயகர் குவாசிம் சூரி நிராகரித்ததற்குத் தடைவிதித்ததுடன், அதிபர் பிறப்பித்த உத்தரவும் செல்லாது என உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை பாகிஸ்தான் அரசு தாமதப்படுத்தி வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தன.

இந்த நிலையில் நேற்று இரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில், 174 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் இம்ரான் கான் அரசு ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார்.

மேலும் பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ்ஷெரீப் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism