Published:Updated:

பாகிஸ்தான் பேரணியில் அமைச்சர் ஜெய்சங்கர் வீடியோ... இந்திய வெளியுறவுக் கொள்கையை புகழ்ந்த இம்ரான்

இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை காட்டி இந்திய வெளியுறவுக் கொள்கையை புகழ்ந்தார்.

பாகிஸ்தான் பேரணியில் அமைச்சர் ஜெய்சங்கர் வீடியோ... இந்திய வெளியுறவுக் கொள்கையை புகழ்ந்த இம்ரான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை காட்டி இந்திய வெளியுறவுக் கொள்கையை புகழ்ந்தார்.

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் பெற்றது. ஆனால் இந்தியா தனது மக்களின் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடிகிறது. ஆனால், ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் இது முடியவில்லை.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி நாடு இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியதற்கு இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள்..." என இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக பேசும் வீடியோவை போட்டு காண்பித்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அந்த வீடியோவில் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ``ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு’’ என்றார். அந்த வீடியோவில் இது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, பேசிய இம்ரான் கான், ``ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து வாங்கவில்லை’’ என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் ஒரு முறை பாராட்டிப் பேசியிருக்கிறார்.