Published:Updated:

``இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அந்நாட்டு மக்களின் நலனுக்கானது” - மீண்டும் பாராட்டிய இம்ரான் கான்

இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் ஒரு முறை பாராட்டிப் பேசியிருக்கிறார்.

``இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அந்நாட்டு மக்களின் நலனுக்கானது” - மீண்டும் பாராட்டிய இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் ஒரு முறை பாராட்டிப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இந்த நிலையில், `இம்ரான் கான் சரியாக அரசாங்கத்தை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்' என அந்த நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டினர். இதையொட்டி, இம்ரான் கான் தலைமையிலான அரசுமீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அண்மையில் இம்ரான் கான் ,``இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது. அது மக்களின் நலனுக்கானது’’ என்று தெரிவித்திருந்தார்.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

நேற்று லாகூர் பேரணியில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பற்றி மீண்டும் புகழ்ந்திருக்கிறார். அப்போது பேசிய அவர், ``ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா சபை கொண்டுவந்த தீர்மானங்கள் மீது இந்தியா வாக்கெடுப்பைப் புறக்கணித்தது. மேலும், அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்குக் காரணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அந்த நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்துக்கானது. ஆனால் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை மற்றவர்களின் முன்னேற்றத்துக்கானது" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism